Thursday, October 24, 2013

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி, அக். 25-

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்.

அரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த இவர் பிளஸ்-2 தேர்வில் 940 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றர். இவருக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படிப்பில் இடம் கிடைத்தது. இந்த கல்லூரியில் சேர்ந்த அவர் தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இதுதொடர்பாக மாணவி கல்கி கூறியதாவது:- நான் சிறுமியாக இருந்த போது எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்வதே மிகவும் அரிது. இருந்தபோதிலும் பிற சிறுவர் - சிறுமிகளை போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என நான் அடம் பிடித்ததால் என்னை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.

பல்வேறு தடைகளை சந்தித்த போதும் அவற்றை சமாளித்து நன்றாக படித்த எனக்கு இப்போது அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தபின்னரும் கல்லூரி மாணவ - மாணவிகள் என்னிடம் சகஜமாக பழகுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடையே கல்வி தொடர்பான விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம். நான் பட்டப்படிப்பை முடித்த பின்னர் வக்கீலுக்கு படிக்க விரும்புகிறேன் .

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

4 comments:

  1. உண்மை.. நானும் நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்தவன்.. நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறோம்..
    நான் கடந்த 2015 வருடம் MCA முடித்தேன்.. தற்போது தனியார் துறையில் வேலை செய்கிறேன்..
    சினிமா போன்ற மீடியாக்கள் மூலம் எனது சமுதாய மக்கள் இன்னமும் மட்டமாகவும், தரம் குறைவாகவும் காட்டப் படுகின்றனர்..

    ReplyDelete
  2. அதனால் என் சமுதாய பிள்ளைகள் படிக்க பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் போது பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்

    ReplyDelete
  3. சினிமாக்களில் எங்கள் சமுகத்தை முன்னேறத சமுதாயமாக காட்டுவதால் எங்களை தமிழக மக்கள் இன்னமும் கேவலமாக தான் நினைக்கின்றனர்

    ReplyDelete
  4. My caste Narikuravar people not educated in before 20 years... but today we are educated and changing our culture... In most of narikuravar childrens are educated...

    ReplyDelete