தமிழால் இணைவோம்:
கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
-ஆரோக்கியமான வாழ்வு
தமிழ் கட்டுரைகள் ,தமிழ்ச் சமுதாயம் ,தமிழ்நாடு,தமிழ் மருத்துவம்,தமிழர் பெருமைகள் ,தமிழ் கவிதைகள் ,தமிழ் கதைகள்
Wednesday, July 31, 2013
கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி
முடக்கத்தான் கீரை பொடி
தமிழால் இணைவோம்:
முடக்கத்தான் கீரை பொடி
முடக்கத்தான் கீரை ஒரு கட்டு, நன்றாக அலம்பி இலைகளை மட்டும் ஆய்ந்து நிழல் உலர்த்தலாக ஒரு மணிநேரம் வரை உலர்த்தி வைக்கவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இரண்டு டேபிள் ஸ்பூன் முழு உளுந்து, ஆட்காட்டி விரல் நீளம் அளவு புளி, ஏழு-எட்டு வத்தமிளகாய், எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் தனித் தனியாக பொன்னிறத்துக்கு வறுத்து ஆறவைக்கவும் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் அலம்பி நிழல் உலர்த்தல் உலர்த்திய கருவேப்பிலை கூட சேர்த்து செய்து கொள்ளலாம். முடக்கத்தான் கீரை ரொம்ப கசக்கும் என்பதால், கசப்பு கொஞ்சம் மட்டுபடும் மேலும் கருவேப்பிலை வாசனை நன்றாக இருக்கும்.
தினசரி உணவுக்கு முன் ஒரு கைப்பிடி சுடும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை கலந்து சாப்பிடலாம். இந்தப் பொடி எண்ணெய் சேர்க்காமல் வறுத்து செய்வதால், டப்பாவில் போட்டு fridge-ஜில் வைத்து இரண்டு வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.
முதுகு தண்டுவடம் தேய்ந்து அல்லது வலி, தோள்பட்டை/கழுத்து எலும்புகளில் வலி, மெனோபாஸ்சிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் bone density குறைபாடுகள், மூட்டு எலும்பு சம்பந்த நோய்களால் உண்டாகும் உபாதைகள் குறையும். முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு பேதி ஆகலாம். அதனால் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் வராது.
-ஆரோக்கியமான வாழ்வு
கலைவாணர் வாழ்க்கையில் ...!!!
கலைவாணர்
வாழ்க்கையில் ...!!!
கலைவாணர் ஒரு பெரிய
கிரெட்டேரியன் நாய்
ஒன்றை பாசத்துடன்
வளர்த்து வந்தார்.
அதற்க்கு'டிக்கி'
என்று பெயர் வைத்தார்.
அது கலைவானரிடம்
செல்லக் குழந்தைப்
போலவே பழகியது.
சாக்கடையை துழாவினால் தங்கமும் கிடைக்கலாம்
அந்தப் பெரியவர்
சிறுவர்களுக்கு ஒரு
விளையாட்டு பொருள்,
சிறுவர்களின் கையில்
கிடைக்கும்
சிறு கூழாங்கற்கள்
அவர் உடலை பதம்
பார்ப்பதும் உண்டு,
மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம்,
அரை மணி நேரம் 50 ரூபாயில் அழகாக வரைந்து கொடுத்து விடுகிறார்
ஒரு திறமைமிக்க
மனிதரை பார்த்தேன்.
அரை மணி நேரம் அவர்
முன் உட்கார்ந்தால்,
நம்மை அவ்வளவு அழகாக
வரைந்து கொடுத்து
விடுகிறார், 50 ரூபாயில்.
இதில் என்ன
இருக்கிறது என்று தான
ஆச்சர்யம் என்னவென்றால் ,அவர் ஒரு software engineer.
இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு கார என்ன..?
இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு கார என்ன..?
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.