அந்தப் பெரியவர்
சிறுவர்களுக்கு ஒரு
விளையாட்டு பொருள்,
சிறுவர்களின் கையில்
கிடைக்கும்
சிறு கூழாங்கற்கள்
அவர் உடலை பதம்
பார்ப்பதும் உண்டு,
மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம்,
இடுப்பை மறைக்கும்
கிழிந்த சாக்கு.
முகத்தை மூடி மறைத்திருக்கும் பெரிய
சாடமுடியும்.
தாடியும்.
குளித்தே பலவருடமாக அழுக்கில் உரம்
ஏறிப்போன உடம்பும்.
குப்பைகளை வாரி வைத்து முதுகில்
தொங்கவிட்டு இருக்கிற பாங்கும்
தெருமுனையில் அவர்
வந்தவுடன் வீசும்
முடைவீச்சும்.
யாரையும் அவரிடம்
அண்ட விடாமல்தான்
செய்யும்,
திடீரென்று
அவர் போடுகின்ற
கூச்சலும். பாடுகின்ற
பாடலும்
மூளை பிளந்து போன
பரம்பரை பைத்தியம்
என்று பறைசாற்றும்.
ஊரில் இருக்கின்ற
குப்பைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து
பையில் திணித்துக்
கொள்ளும் அவரின்
ஆவேசம்
எல்லோரையும்
பயமுறுத்தும்.
இப்படிப்பட்ட அந்த
பைத்தியத்தை அணுகிய மகாகவி பாரதியார்.
ஏன்
இப்படி குப்பைகளை
சுமக்கிறாய்
என்று கேட்டாரம்,
அதற்கு அந்த பைத்தியம்
முண்டம் முண்டம் நான்
வெளியில்
சுமக்கிறேன், நீ
உள்ளுக்குள்
சுமக்கிறாய்
என்று கூறியதாம்,
அப்போதுதான்
பாரதியாருக்கு புரிந்து இருக்கிறது, அவர்
ஞானப்பித்தன்
என்று.
வெளியில்
தெரியும்
கோலத்திற்கும்
உள்ளுக்குள்
இருக்கும்
ஞானத்திற்கும் எந்த
தொடர்பும் இல்லை,
அலங்கரிக்கப்பட்ட
பூக்களைப் புரட்டிப்
பார்த்தால் புழுக்கள்
நெளிவதைப்
பார்க்கலாம்,
கலங்கி நிற்கும்
சாக்கடையை துழாவினால் தங்கமும்
கிடைக்கலாம்.
No comments:
Post a Comment