Wednesday, July 31, 2013

கலைவாணர் வாழ்க்கையில் ...!!!


கலைவாணர்
வாழ்க்கையில் ...!!!

கலைவாணர் ஒரு பெரிய
கிரெட்டேரியன் நாய்
ஒன்றை பாசத்துடன்
வளர்த்து வந்தார்.
அதற்க்கு'டிக்கி'
என்று பெயர் வைத்தார்.

அது கலைவானரிடம்
செல்லக் குழந்தைப்
போலவே பழகியது.


ஒருமுறை கலைவாணரும்
மதுரம் அம்மையாரும்
சீட்டு விளையாடிக்
கொண்டிருந்தனர்.
கலைவாணர் தான்
விரும்பிய சீட்டைப் போட
முயன்றார். மதுரம் அவர்
கையிலிருந்த
அத்தனை சீட்டையும்
பறித்து, தான் விரும்பிய
சீட்டைப் போட முயன்றார்.

தன் எஜமானன்
கையிலிருந்த சீட்டுகள்
பறிக்கப்படுவதை அறிந்த
"டிக்கி" கோபத்துடன்
மதுரம் அம்மையாரின்
கன்னத்தை முட்டுவாயோடு
கவ்வியது. மதுரம்
அலறினார்.

"மதுரம்..அசையாதே..சதை போயிடும்.."
என்ற கலைவாணர்
இரண்டு கைகளாலும்
பிடித்து நாயின் வாயைப்
பிளந்து மதுரத்தின்
கன்னத்தை மீட்டார்.

கலைவாணர் கோவையில்
கைதான பின்னர், தன்
எஜமானரைப் பிரிந்த
"டிக்கி' ஒழுங்காக
சாப்பிட வில்லை.

ரேடியோவில் தன்
எஜமானரின் குரலைக்
கேட்டால்
சுறுசுறுப்படையும்.
எனவே அவரது பாடல்கள
போட்டுக்
காட்டி "டிக்கியை"
சாப்பிட வைத்தார்கள்.

ஆனால்
தன்னை ஏமாற்றி சாப்பிட
வைக்கிறார்கள்
என்பதையும் சில
நாட்களில் "டிக்கி"
உணர்ந்து கொண்டது.
அதிலிருந்து அது சாப்பிட
மறுத்தது.
பட்டினி கிடந்தே சில
நாட்களில் தன்
உயிரையும் விட்டது.

No comments:

Post a Comment