Monday, November 4, 2013

தயார் நிலையில் மங்கள்யான்: திட்டமிட்டபடி நாளை ஏவப்படும் mangalyaan ready position tomorrow will launch as planned

தயார் நிலையில் மங்கள்யான்: திட்டமிட்டபடி நாளை ஏவப்படும் mangalyaan ready position tomorrow will launch as planned

சென்னை, நவ. 4–

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் எனும் விண்கலத்தை தயாரித்துள்ளது.

இந்த விண்கலம் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

மங்கள்யானை தயார் படுத்துவதற்கான 56½ மணி நேர கவுண்ட் டவுன் நேற்று அதிகாலை 6.08 மணிக்கு தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மங்கள்யானில் இன்று இறுதிகட்ட இணைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

மங்கள்யானை சுமந்து செல்லும் 45 மீட்டர் நீளமுள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த ராக்கெட் 76 மீட்டர் நீளமுள்ள நகரும் கோபுரம் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவு தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று அந்த நகரும் கோபுரம் ராக்கெட்டை ஏவுதளத்தில் நிலை நிறுத்தும். இதன் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முழு அளவில் தயார் நிலையில் உள்ளது.

நாளை மதியம் 2.38 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பறந்ததும், அது அடுத்த 40-வது நிமிடத்தில் மங்கள்யானை பூமி சுற்றுப் பாதையில் கொண்டு போய்விடும். தென் அமெரிக்காவுக்கு மேல் உள்ள சுற்றுப்பாதையில் மங்கள்யான் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 முதல் 25 நாட்களுக்கு மங்கள்யான் பூமியை சுற்றி வரும். டிசம்பர் 1–ந் தேதி மங்கள்யான் செவ்வாய் நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கும். 9 மாதங்கள் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ந்தேதி அது செவ்வாய் கிரகம் அருகில் சென்று அடையும்.

மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டப்படி செவ்வாயை ஆய்வு செய்தால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா எட்டிப்பிடிக்கும். இதுவரை ஐரோப்பிய விண்வெளி கழகம், அமெரிக்காவின் நாசா, ரஷியா ஆகியவையே செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 51 விண்கலங்கள் ஏவப்பட்டன. அதில் 21 விண்கலங்கள்தான் வெற்றி பெற்றன.

இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்த பல்வேறு நாடுகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆலந்து நாட்டு நிறுவனம் ஒன்று இன்னும் 10 ஆண்டுகளில் காலனி ஒன்றை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.

அதில் குடியேற உலகின் பல நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் செவ்வாயில் குடியேற விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.

...

shared via

No comments:

Post a Comment