லிம்கா சாதனையில் 'என்ன சத்தம் இந்த நேரம்'
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளைப் பற்றிய படமான 'என்ன சத்தம் இந்த நேரம்' படம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.
சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்த நிதின் சத்யா சின்ன இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாகும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.
ஹைதராபாத் மற்றும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஏவி புரொடக்ஷன் சார்பில் ஏவி அனூப் தயாரிக்க இப்படத்தை குரு ரமேஷ் இயக்கியுள்ளார்.
உயிரியல் பூங்காவுக்கு வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போகிறார்கள். பூங்கா பாதுகாவலரான நிதின் சத்யா ஒரேநாளில் அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் கதை.
இந்தப் படத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் முன்னணி இயக்குனர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
ஒரு படத்தில் ஒரே நேரத்தில் பிறந்த நான்கு சகோதரர்கள் நடிப்பதும் இதுதான் முதல்முறையாம். இதனால் இப்படத்தினை லிம்கா சாதனைக்கு விண்ணப்பித்தார்கள்.
படப்பிடிப்பு இடத்திற்கு சென்று ஆய்வு செய்த லிம்கா குழுவினர், லிம்கா சாதனைப் புத்தகத்தில் படத்தை இடம் பெற சம்மதித்தனர்.
அதன்படி இன்று படக்குழுவினரைச் சந்தித்து அதற்கான சான்றிதழை அளிக்க இருக்கிறார்கள்.
shared via
No comments:
Post a Comment