Friday, October 4, 2013

Excel Functions..எக்ஸெல் பங்சன்கள்

Excel Functions..எக்ஸெல் பங்சன்கள்

by silentsounds
New
Excel Functions-எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப்படுகின்றன. இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப்படும்.

2. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =AVERAGE(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப்பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =MAX(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

இதனை அமைக்கும் விதம் =COUNT(A1:A4)

5. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =Min (A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

6. Round: செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும்.

இதனை அமைத்திடும் விதம் =ROUND(A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும்.

மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப்படும் செல்களின் எண்களைத் தரலாம்.

Show commentsOpen link

No comments:

Post a Comment