8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon
இஸ்தான்புல், அக். 28-
2.51 மீட்டர் (8 1/4 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளவர் சுல்தான் கோசென். துருக்கி நாட்டில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் பருவத்தே பயிர் செய்ய விரும்பி தகுந்த பெண்ணை தேடி வந்தார்.
ஆனால், இவரது உயரத்தை கண்டு மிரண்ட பல பெண்கள் இவருக்கு கழுத்தை நீட்ட மறுத்து விட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய், இனி காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்த சுல்தான் கோசென், தற்போது தனது 30வது வயதில் மெர்வோ டிபோ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
முதல் சந்திப்பிலேயே, கண்ணும் கண்ணும் ஒட்டிக்கிச்சு.. காதல் வந்து பத்திக்கிச்சு என்ற உணர்வு மெர்வோ டிபோவை வாட்டி வதைக்க சுல்தான் கோசென்-னை திருமணம் செய்துக் கொள்ள அவர் சம்மதித்துள்ளார். பொறுத்தது போதும் - பொங்கி எழு என்ற ரீதியில் சுல்தான் கோசென் அவசர கதியில் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தன்னை விட 2 1/2 அடி (30 அங்குலம்) உயரம் குறைவான காதலியை மணம் முடிக்கும் விழாவுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்களையும் இவர் அழைத்துள்ளார்.
திருமண உடைகள் உள்ளிட்ட எல்லா வேலையையும் முடித்து விட்ட சுல்தான் கோசென் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர்வலம் போக உயரமான காரை தேடிக் கொண்டிருக்கிறார்.
...
shared via
No comments:
Post a Comment