தமிழ் கட்டுரைகள் ,தமிழ்ச் சமுதாயம் ,தமிழ்நாடு,தமிழ் மருத்துவம்,தமிழர் பெருமைகள் ,தமிழ் கவிதைகள் ,தமிழ் கதைகள்
Wednesday, August 7, 2013
Tuesday, August 6, 2013
புத்திசாலிதனம்
தகவல் புத்தகம்:
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்
ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.
அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.
பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.
"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."
இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.
அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.
புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?
தண்ணீர் குடிக்க வேண்டிய சரியான நேரம்
சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால்
ஏற்படும் பலன் ...!
1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால்
உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.
2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும்
1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால்
தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.
4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால்
மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!
அமெரிக்காவின் மேயர் 4 வயது சிறுவன்
தகவல் புத்தகம்:
அமெரிக்காவின் மேயராக 4
வயது சிறுவன்
மீண்டும் தேர்வு -
அமெரிக்காவின்
மின்னெசோட்டா
பகுதியிலுள்ள டார்செட்
என்ற சிறிய நகரின்
மேயராக 3
வயது சிறுவனான
ராபர்ட் பாபி டஃப்ட்ஸ்
என்பவன் கடந்த
ஆண்டு நியமிக்கப்பட்டான்.
குறைந்த மக்கள்
தொகையை கொண்ட
டார்செட் நகருக்கு என
தனி அரசோ,
அரசு நிர்வாகமோ
கிடையாது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த
ஆண்டு மேயர் தேர்தலில்
தற்போது 4 வயதாகும்
ராபர்ட் பாபி டஃப்ட்ஸ்
போட்டியிட்டான். இந்த
தேர்தலுக்காக டார்செட்
நகரில் உள்ள கடைகளில்
வாக்கு பெட்டிகள்
வைக்கப்பட்டன.
ஒரு டாலர்
செலுத்தி நகர மேயராக
யார் வர வேண்டும்?
என்பதை மக்கள்
வாக்கு பெட்டிகளில்
எழுதி போட்டனர்.
இந்த
பெட்டிகளில் உள்ள
வாக்கு சீட்டுகள்
அனைத்தும்
ஒரு தொட்டியில்
போட்டு நன்றாக
குலுக்கப்பட்டன.
துணியால் கண்கள்
கட்டப்பட்ட ஒரு நபர்
தொட்டியில்
இருந்து ஒரு வாக்கு
சீட்டை எடுத்தார்.
அந்த
சீட்டில் தற்போதைய
மேயராக உள்ள
சிறுவனின் பெயரே இடம்
பெற்றிருந்ததால் அவனே அடுத்த
மேயராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டதாக
தேர்தல் நடுவர்கள்
அறிவித்தனர்.
தொடர்ந்து 2வது முறை
டார்செட் நகர மேயரான
மகிழ்ச்சியை ராபர்ட்
பாபி டஃப்ட்ஸ் ஐஸ்கிரீம்
சுவைத்தபடியே
கொண்டாடினான்.
:-)
Monday, August 5, 2013
பேரீச்சை பழத்தின் நண்மைகள்
பேரீச்சை..!
அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய
சத்து நிறைந்த கனியென்றால்
அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த
அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும்
சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான
உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும்
ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட
வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும்
ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை.
உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும்
உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான்
விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப்
பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை,
எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது.
குடற்பகுதியில் இருந்து, கெட்ட
கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல்
பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில்
புற்றுநோயை உருவாக்கும்
ரசாயனங்களை நீக்குவதிலும்
பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும்
நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது.
நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல்
உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக
செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ,
பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது.
இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்க
ும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-
சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின்
நிறைந்துள்ளது.
இவை உடற்செல்களை காப்பதோடு,
தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்க
ளை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல்,
தொண்டை, மார்பகம், நுரையீரல்,
இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்
புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக்
கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக
அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90
மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது,
ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும்
ஹிமோகுளோபின் உருவாக்கத்தில்
பங்கு வகிப்பதாகும். இது ரத்தம்
ஆக்சிஜனை சுமந்து செல்லும்
அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில்
உள்ளது. உடலுக்குத் தேவையான
மின்னாற்றலை வழங்கும் தாதுவாக
பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும்
வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம்
அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த
அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும்
பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள்
ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம்
போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது.
கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின்
பலத்திற்கு அவசியம். நாடித்
துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக்
கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும்
பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள்
உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது.
மக்னீசியம் எலும்புகளின்
வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ்
வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில்
மிகுந்துள்ளது.
Sunday, August 4, 2013
தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவர்
Leonid Rogozov என்பவர் தான்
தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்
முதல் மருத்துவர்.
1961 ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov
க்கு கடும் வயிற்று வலியும் காய்ச்சலும்
வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த
போது அவருக்கு குடல் அழற்சி நோய்
இருப்பதை கண்டு பிடித்தார்.
குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால்
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் இல்லை என்றால் குடல் வால்
வெடித்து,
உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.அதனால்
அவரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொ
முடிவெடுத்தார்.
மயக்க மருந்து கொடுக்காமல் வெறும்
மறத்து போகும்
மருந்து கொடுத்து அவரே அறுவை சிகிச்சை செ
ஆரம்பித்தார்.அவருடைய உதவிக்கு அவர்கள்
நண்பர்கள் ஒருவர் இஞ்சினியர் இன்னொருவர்
வான்வெளி ஆராய்ச்சியாளர் உடன் இருந்தனராம்.
மருத்துவர்களின்பார்வை பருந்தைபோல
துல்லியமாகவும் இதயம் சிங்கத்தை போல
தைரியமாகவும் இருக்கும் என்பதற்கு இவர்
ஒரு எடுத்துகாட்டு.
Saturday, August 3, 2013
முருங்கைக் கீரையின் பயன்கள்!
முருங்கைக் கீரையின் பயன்கள்!
• முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல்
சூடு தணியும்.
வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும்
மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக்
கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம்
பலப்படும் தாதுவும்(sperm)பெருகும்.
எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது.
•
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி
மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன்
சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின்
வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில்
இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்
சத்து ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில்
வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின்
உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல்
கெட்டிப்படும். முடி நீண்டு வளரும்.
நரை முடி குறையும்.தோல் வியாதிகள்
நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்
புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய
வியாதிகளுக்கெல்லாம்
முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண்,
கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும்
பயன்படுகிறது. வாரத்தில்
ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்
காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும்,
சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண்
வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.
முருங்கைக்காய் சூப் காய்ச்சல்,
மூட்டு வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின்
குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கு
பிரசவத்தை துரிதப்படுத்தும்.
முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும்
பதார்த்தம், தாய்ப்பால்
சுரப்பதை அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக்
கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது.
ஆண், பெண் இருபாலரின் மலட்டுத்
தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த
விருத்திக்கு நல்ல உணவு.
