Tuesday, August 6, 2013

புத்திசாலிதனம்

தகவல் புத்தகம்:
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

No comments:

Post a Comment