Friday, August 23, 2013

சிகரட் விளம்பரம் - Cigrette Ads

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..

அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2 உங்களுக்கு முதுமையே வராது

3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்காடினார் நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி
நீதி பதியிடம் விளக்கம் அளித்தார் .



இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே என்று கேட்டார்

அதற்க்கு அவன் சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
ஆமாம் வரமாட்டான்
காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும் இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது .முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்

2 வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும்
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்

3 வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது
எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது.

அவன் சொன்னது சரிதான் நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் இப்படி தந்திரமான பேச்சை நம்பாமல் இருப்போம்.

-படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment