Thursday, August 29, 2013

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல Hindi is not national language of India



இந்தியாவை போலவே பிஜி நாட்டிலும் இந்தியை திணிக்க அரசியல் சாசனம் திருத்தம். ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு .

இந்தியாவில் பெருவாரியான மொழிகளை அழித்த இந்தி தற்போது பிஜி நாட்டின் சொந்த மொழியை அழிக்க களமிறக்கப்பட்டுள்ளது !


இந்தியாவில் சில மாநில மக்களின் தாய் மொழியான இந்தியை அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் படவேண்டும் என இந்தி வெறி ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டி அதில் வெற்றியும் கண்டனர் . அதன் காரணமாக பல மாநிலங்கள் இன்று தாய் மொழியை இழந்து வருகிறது . பல நூறு வட்டார மொழிகள் அழிந்தே போயின.

இப்போது பிஜி அரசும் இந்தியை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க முயல்கிறது . அதற்கான அரசியல் திருத்தும் செய்துள்ளது . ஏற்கனவே ஆங்கிலமும் பிஜி மொழியும் அந்நாட்டில் கட்டாய பாடமாகும். இந்நிலையில் இந்தியும் கட்டாய பாடமானால் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆங்கிலம் பொது மொழியாக இருக்கும் போது இந்தி எதற்கு என கேள்வி எழுப்பி உள்ளனர் .

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே தாய் மொழியை தமிழர்கள் தக்க வைத்துக் கொண்டாலும் , தமிழக ஆட்சியாளர்கள் தமிழர் அல்லாத காரணத்தால் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழ் வழிக் கல்விக்கு மூடுவிழா கண்டனர் . தாய் மொழியை இழக்கும் சமூகமாக தமிழ்ச் சமுதாயம் மாறிவருகிறது என்பதும் மறுக்க முடியாது .

பிஜி போன்ற சிறிய நாடுகள் இந்தித் திணிப்பால் தாய் மொழியை தக்க வைப்பார்களா என்பது கேள்விக் குறிதான் .

No comments:

Post a Comment