Monday, November 4, 2013

கடல் மற்றும் தரையில் ஓடும் நவீன கார் மூலம் 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து உலகை சுற்றும் முயற்சி துவக்கம் Estonia man to trip world through Amphibian car

கடல் மற்றும் தரையில் ஓடும் நவீன கார் மூலம் 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து உலகை சுற்றும் முயற்சி துவக்கம் Estonia man to trip world through Amphibian car

லண்டன், நவ.4-

எதிரிகள் காரில் விரட்டிக்கொண்டு வரும்போது விர் என்று ஆற்றுக்குள் பாய்ந்து காரை படகாக்கி ஜேம்ஸ் பாண்ட் செய்யும் சாகசங்களை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம்.

இந்த காட்சிகளை நிஜமாக்கும் நவீன காரை டொயோட்டா நிறுவனம் லேண்ட் க்ரூசியர் என்ற பெயரில் தயாரித்துள்ளது.

வட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவை சேர்ந்த மெய்ட் நிப்சன்(44) என்பவர் இந்த காரின் மூலம் கடல் மற்றும் தரை வழியாக 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து 9 மாதங்களில் உலகை சுற்றிவரும் சாகச பயணத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினார்.

4 x 4 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கார், நீரில் பயணிக்கும் போது 10 மீட்டர் உபஇணைப்பு கொண்ட படகாக மாறிவிடும். இதற்காக சுமார் 200 மணி நேரம் கடலில் ஒத்திகை பயணத்தை நடத்தியுள்ள மெய்ட் நில்சன் நேற்று முன்தினம் டெய்லின் இருந்து தனது சாகச பயணத்தை தொடங்கினார்.

எஸ்டோனியா, லட்வியா, விதுவேனியா, போலாந்து, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மொராக்கோ, மவுரிடானியா, செனெகல், வெட்டே வளைகுடா, பிரேசில், அர்ஜெண்டினா, சிலி, பெரு, கொலம்பியா, பனாமா, நிகாராகுவா, ஹொன்டுராஸ், கவுடெமாலா, மெக்சிக்கோ, அமெரிக்க, கனடா மற்றும் ரஷ்யா வரியாக 60 ஆயிரம் கி.மீட்டர் தரை வழியாகவும், கடல் மற்றும் ஆறுகள் மார்க்கமாக சுமார் 9 மாதங்கள் பயணித்து மீண்டும் அவர் எஸ்டோனியா வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

தயார் நிலையில் மங்கள்யான்: திட்டமிட்டபடி நாளை ஏவப்படும் mangalyaan ready position tomorrow will launch as planned

தயார் நிலையில் மங்கள்யான்: திட்டமிட்டபடி நாளை ஏவப்படும் mangalyaan ready position tomorrow will launch as planned

சென்னை, நவ. 4–

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் எனும் விண்கலத்தை தயாரித்துள்ளது.

இந்த விண்கலம் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

மங்கள்யானை தயார் படுத்துவதற்கான 56½ மணி நேர கவுண்ட் டவுன் நேற்று அதிகாலை 6.08 மணிக்கு தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மங்கள்யானில் இன்று இறுதிகட்ட இணைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

மங்கள்யானை சுமந்து செல்லும் 45 மீட்டர் நீளமுள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த ராக்கெட் 76 மீட்டர் நீளமுள்ள நகரும் கோபுரம் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவு தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று அந்த நகரும் கோபுரம் ராக்கெட்டை ஏவுதளத்தில் நிலை நிறுத்தும். இதன் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முழு அளவில் தயார் நிலையில் உள்ளது.

நாளை மதியம் 2.38 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பறந்ததும், அது அடுத்த 40-வது நிமிடத்தில் மங்கள்யானை பூமி சுற்றுப் பாதையில் கொண்டு போய்விடும். தென் அமெரிக்காவுக்கு மேல் உள்ள சுற்றுப்பாதையில் மங்கள்யான் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 முதல் 25 நாட்களுக்கு மங்கள்யான் பூமியை சுற்றி வரும். டிசம்பர் 1–ந் தேதி மங்கள்யான் செவ்வாய் நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கும். 9 மாதங்கள் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ந்தேதி அது செவ்வாய் கிரகம் அருகில் சென்று அடையும்.

மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டப்படி செவ்வாயை ஆய்வு செய்தால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா எட்டிப்பிடிக்கும். இதுவரை ஐரோப்பிய விண்வெளி கழகம், அமெரிக்காவின் நாசா, ரஷியா ஆகியவையே செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 51 விண்கலங்கள் ஏவப்பட்டன. அதில் 21 விண்கலங்கள்தான் வெற்றி பெற்றன.

இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்த பல்வேறு நாடுகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆலந்து நாட்டு நிறுவனம் ஒன்று இன்னும் 10 ஆண்டுகளில் காலனி ஒன்றை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.

அதில் குடியேற உலகின் பல நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் செவ்வாயில் குடியேற விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.

...

shared via

Thursday, October 31, 2013

லிம்கா சாதனையில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ limca world record movie

லிம்கா சாதனையில் 'என்ன சத்தம் இந்த நேரம்'

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளைப் பற்றிய படமான 'என்ன சத்தம் இந்த நேரம்' படம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்த நிதின் சத்யா சின்ன இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாகும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

ஹைதராபாத் மற்றும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஏவி புரொடக்‌ஷன் சார்பில் ஏவி அனூப் தயாரிக்க இப்படத்தை குரு ரமேஷ் இயக்கியுள்ளார்.

உயிரியல் பூங்காவுக்கு வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போகிறார்கள். பூங்கா பாதுகாவலரான நிதின் சத்யா ஒரேநாளில் அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் கதை.

இந்தப் படத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் முன்னணி இயக்குனர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

ஒரு படத்தில் ஒரே நேரத்தில் பிறந்த நான்கு சகோதரர்கள் நடிப்பதும் இதுதான் முதல்முறையாம். இதனால் இப்படத்தினை லிம்கா சாதனைக்கு விண்ணப்பித்தார்கள்.

படப்பிடிப்பு இடத்திற்கு சென்று ஆய்வு செய்த லிம்கா குழுவினர், லிம்கா சாதனைப் புத்தகத்தில் படத்தை இடம் பெற சம்மதித்தனர்.

அதன்படி இன்று படக்குழுவினரைச் சந்தித்து அதற்கான சான்றிதழை அளிக்க இருக்கிறார்கள்.

shared via

Tuesday, October 29, 2013

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம் agadam movie

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம்

கின்னஸ் உலக சாதனைத் திரைப்படம் 'அகடம்' அடுத்த மாதம் நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்திய சினிமா நூற்றாண்டு காணும் இந்த வேளையில் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'அகடம்'.

எண்ணற்ற உலக சினிமா விரும்பிகளின் கவனத்தைத் திருப்பிய இப்படம் வெளியாவதில் அகடம் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

அகடம் முழு திரைப்படமும் தொடர்ந்து 2 மணிநேரம் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் எவ்வித கட், ரீடேக் எதுவும் இல்லாமல் படமாக்கப்பட்டதுதான்.

சமூக சிந்தனையுள்ள இப்படம் முழுவதும் ஒரே இடத்தில் திகிலூட்டும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகளால் யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

சமீபத்தில், இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் 'அசிஸ்ட் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் அதன் ஆண்டுவிழாவில் அகடம் படக்குழுவினரை சாதனைச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தியது.

'கின்னஸ் உலக சாதனை' நிறுவனம் ஏற்கனவே இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனைப்படத்தை கன்னடம் மற்றும் இந்தி பட உலகிற்கும் கொண்டுசெல்லும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

திரைப்படத்திற்கும், நாடகத்திற்கும் சில இலக்கணங்கள் உண்டு, ஒரே சாட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டால் அது நாடகமாகவே அமையுமே அல்லாமல் திரைப்படமாக அமையாது என்பது கவனிக்கத்தக்கது.

shared via

Sunday, October 27, 2013

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

இஸ்தான்புல், அக். 28-

2.51 மீட்டர் (8 1/4 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளவர் சுல்தான் கோசென். துருக்கி நாட்டில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் பருவத்தே பயிர் செய்ய விரும்பி தகுந்த பெண்ணை தேடி வந்தார்.

ஆனால், இவரது உயரத்தை கண்டு மிரண்ட பல பெண்கள் இவருக்கு கழுத்தை நீட்ட மறுத்து விட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய், இனி காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்த சுல்தான் கோசென், தற்போது தனது 30வது வயதில் மெர்வோ டிபோ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பிலேயே, கண்ணும் கண்ணும் ஒட்டிக்கிச்சு.. காதல் வந்து பத்திக்கிச்சு என்ற உணர்வு மெர்வோ டிபோவை வாட்டி வதைக்க சுல்தான் கோசென்-னை திருமணம் செய்துக் கொள்ள அவர் சம்மதித்துள்ளார். பொறுத்தது போதும் - பொங்கி எழு என்ற ரீதியில் சுல்தான் கோசென் அவசர கதியில் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தன்னை விட 2 1/2 அடி (30 அங்குலம்) உயரம் குறைவான காதலியை மணம் முடிக்கும் விழாவுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்களையும் இவர் அழைத்துள்ளார்.

திருமண உடைகள் உள்ளிட்ட எல்லா வேலையையும் முடித்து விட்ட சுல்தான் கோசென் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர்வலம் போக உயரமான காரை தேடிக் கொண்டிருக்கிறார்.

...

shared via

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

துபாய், அக். 28-

பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன் மாதத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து மட்டுமே கையாளப்பட்டு வந்தது.

இங்கிருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 5 3/4 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத அல் மக்தூம் விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது.

பணிகள் நிறைவடைந்த பின்னர் 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 16 கோடி பயணிகளையும் 1.2 கோடி டன் சரக்குகளையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

...

shared via

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

புதுடெல்லி, அக். 27-

உலகின் மிக பிரபலமான கார் பந்தயம் பார்முலா 1 கார் பந்தயமாகும். 19 சுற்றுகலாக நடத்தப்படும் இப்போட்டியின் 16-வது சுற்றான இந்தியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம் இன்று டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்தது.

2011-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இரண்டு போட்டிகளிலும் செபஸ்டியன் வெட்டலே வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் இன்று நடந்த இப்போட்டியிலும் ரெட் புல் அணி சார்பக கலந்துகொண்ட ஜெர்மனியின் இளம் வீரர் செபாஸ்தியன் வெட்டல் அதிக புள்ளிகள் பெற்று இந்தியன் கிராண்ட் பிரீ சாம்பியன்ஸ் கோப்பையை
தொடர்ந்து மூன்றாவது முறையாக தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் ஹாட்ரிக்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தை மெர்சிடிஸ் அணியை சேர்ந்த ரோஸ்பெர்க்கும், மூன்றாவது இடத்தை லோடஸ் அணியை சேர்ந்த குரோஸ்ஜீனும் பெற்றனர்.

தொடர்ந்து 4 உலக சாம்பியன் கோப்பைகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இச்சாதனையை ஜுவான் மேனுவல் பேங்கியோவும், மைக்கேல் சூமேக்கரும் செய்துள்ளனர்.

...

shared via