புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா?
by veni
Google NewsToday, 17:46
பிறக்கிற குழந்தை புத்திசாலியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?
கரு உருவான 20-வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 -வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.
இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்''
குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை…
இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை. 'ருபெல்லா' என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு 'ருபெல்லா வேக்சினேஷன்' எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும்.
அதே போல் அவளுடைய 15-வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும். இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு!
இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறையலாம்.
மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும். இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்பதால்தான்.
இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ… அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!
The post புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா? appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment