உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!
by Marikumar
முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.
ஆனால் இந்த உடல் வெப்பநிலையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இந்த அதிகப்படியான உடல் வெப்பத்தை வெப்ப அழுத்தம் என்றும் சொல்வார்கள். இத்தகைய உடல் வெப்பமானது அதிகம் இருந்தால், அது தானாக குறையாமல், வயிற்று வலி, உள்ளுறுப்புகளில் பாதிப்பு, பிம்பிள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் வெப்பமானது அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், அதிகப்படியான வெப்ப காலநிலை, அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இருப்பினும் இத்தகைய உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில் பராமரிக்க முடியும். அதிலும் தண்ணீரை மட்டும் தான் பருக வேண்டும் என்பதில்லை, குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவதன் மூலமும், உடல் வெப்பத்தை தணிக்க முடியும்.
சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய சில ஜூஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் குறைக்க முடியும்.
சீரகம், உடல் வெப்பத்தை குறைக்கக்கூடிய தன்மை பெற்றவை. எனவே தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் தணிக்கலாம்.
எலுமிச்சை ஜூஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் வெப்பத்தை தணிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலம் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.
உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று தான் மோர். இத்தகைய மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்யும்.
வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் உள்ள 95% தண்ணீர், உடல் வெப்பத்தை தணித்து, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.
உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களுள் மிகவும் சக்தி வாய்ந்த பானம் என்றால் அது இளநீர் தான். எனவே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், நாளடைவில் உடல் வெப்பமானது சீராக இருக்கும்.
உடலில் தண்ணீர் அதிகம் தேங்கினால், அது பெரும் தொந்தரவாகிவிடும். எனவே அத்தகைய தண்ணீர் தேக்கத்தை தடுக்க, குடிக்கும் தண்ணீரில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். முக்கியமாக உடல் வெப்பம் தணிக்கப்படும்.
புதினா ஜூஸ் என்பது உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் மிகவும் சிறப்பானது. ஏனெனில் புதினா குளிர்ச்சி தன்மையைக் கொண்டிருப்பதால், அது உடல் வெப்பத்தை தணித்து, உடலினுள் இருக்கும் உள்காயங்களை சரிசெய்யும். எனவே எலுமிச்சை ஸூஸ் போட்டு, அதில் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும்.
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை விரைவிலேயே குறைக்கலாம்.
கொதிக்க வைக்காத மாட்டுப் பாலை அப்படியே குடித்தால், உடல் வெப்பம் தணிவதோடு, செரிமான பிரச்சனை மற்றும் உடல் வறட்சியும் நீங்கும்.
இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது சோம்பை போட்டு ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பத்தினால் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம்.
Thatstamil
Share |
Show commentsOpen link
No comments:
Post a Comment