கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன??
by Marikumar
இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்!!!
டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.
இந்த சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 91 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன்களை கட்ட தவறும் போது ஏற்பட போகும் விளைவுகளை பற்றி தெரியவில்லை என்று கிரெடிட் சுதார் என்ற முன்னணி கடன் ஆரோக்கிய மேம்பாடு நிறுவனம் கூறியுள்ளது.
8 நகரத்திலிருந்து 300 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த சர்வேயில், 85 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. இந்த செயலகம் கடன் வாங்கியவர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். பணம் கொடுப்பவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் (கடன் விஷயத்தில் அதை திருப்பி கொடுக்கும் அவர்களின்) நம்பகத்தன்மையை பற்றி தெளிவாக கூறி விடும்.
டெல்லி மற்றும் பூனேயில் நான்கில் ஒரு நபருக்கு இந்த கடன் செயலகத்தை பற்றிய அறிவும், புரிதலும் இருக்கிறது. இது போக டெல்லி, பெங்களூரு மற்றும் பூனேயில் சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 10 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன் மதிப்பீட்டின் புள்ளிகள் தெரிந்திருந்தது.
"இந்த சர்வே நடத்திய அடிப்படை காரணம், கடன் வாங்குபவர்கள் கடன் வலுக்குறைவுகளை சந்தித்திருந்தால் அதன் காரணத்தை பற்றியும் விளைவுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எதிர்மறையான கடன் விவரங்கள் மற்றும் குறைவான கடன் மதிப்பீட்டு புள்ளிகளால் அவர்களுக்கு கடன் அளிக்கப்படவில்லை என்ற காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று கிரெடிட் சுதார் நிறுவனத்தின் துணை நிறுவனர்களான அருண் ராமமூர்த்தி மற்றும் கௌரவ் வத்வாணி கூறியுள்ளார்கள்.
இந்த சர்வேயில் கடனின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அதற்கு காரணம் சர்வேயில் கலந்து கொண்டதில் ஒருவர் கூட தங்கள் அடையாளம் திருட்டு போனதற்கு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலும் கலந்து கொண்டவர்களில் 92 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் தங்களுக்கு அளித்துள்ள கடன் மதிப்பீட்டு புள்ளிகளை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.
இது போக சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 4 சதவீத பேர்கள் தான் கடந்த ஒரு வருடத்தில் தங்களின் கடன் மதிப்பீட்டு புள்ளிகளை கேட்டு அறிந்து வைத்துள்ளார்கள். அதே போல் 98 சதவீத பேர்களுக்கு மாதிரி கடன் அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்ட போது அதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"91 சதவீத வாடிக்கையாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று இந்த சர்வே எடுத்து காட்டியுள்ளது." என்று ராமமூர்த்தியும் வத்வாணியும் கூறியுள்ளார்கள்.
"வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் மதிப்பீடு மற்றும் கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகளை பற்றியும் அறிந்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் தொழில்முறை கடன் ஆலோசனை என்பது இந்தியாவில் இல்லை என்பதையும் இந்த சர்வே மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த கருத்தை வழங்க துவங்கினால் கடன் ஆலோசனை சேவைகளுக்கு அதிக இடங்கள் உருவாகும்." என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Share |
Show commentsOpen link
No comments:
Post a Comment