Thursday, October 31, 2013

லிம்கா சாதனையில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ limca world record movie

லிம்கா சாதனையில் 'என்ன சத்தம் இந்த நேரம்'

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளைப் பற்றிய படமான 'என்ன சத்தம் இந்த நேரம்' படம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்த நிதின் சத்யா சின்ன இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாகும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

ஹைதராபாத் மற்றும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஏவி புரொடக்‌ஷன் சார்பில் ஏவி அனூப் தயாரிக்க இப்படத்தை குரு ரமேஷ் இயக்கியுள்ளார்.

உயிரியல் பூங்காவுக்கு வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போகிறார்கள். பூங்கா பாதுகாவலரான நிதின் சத்யா ஒரேநாளில் அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் கதை.

இந்தப் படத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் முன்னணி இயக்குனர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

ஒரு படத்தில் ஒரே நேரத்தில் பிறந்த நான்கு சகோதரர்கள் நடிப்பதும் இதுதான் முதல்முறையாம். இதனால் இப்படத்தினை லிம்கா சாதனைக்கு விண்ணப்பித்தார்கள்.

படப்பிடிப்பு இடத்திற்கு சென்று ஆய்வு செய்த லிம்கா குழுவினர், லிம்கா சாதனைப் புத்தகத்தில் படத்தை இடம் பெற சம்மதித்தனர்.

அதன்படி இன்று படக்குழுவினரைச் சந்தித்து அதற்கான சான்றிதழை அளிக்க இருக்கிறார்கள்.

shared via

Tuesday, October 29, 2013

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம் agadam movie

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம்

கின்னஸ் உலக சாதனைத் திரைப்படம் 'அகடம்' அடுத்த மாதம் நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்திய சினிமா நூற்றாண்டு காணும் இந்த வேளையில் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'அகடம்'.

எண்ணற்ற உலக சினிமா விரும்பிகளின் கவனத்தைத் திருப்பிய இப்படம் வெளியாவதில் அகடம் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

அகடம் முழு திரைப்படமும் தொடர்ந்து 2 மணிநேரம் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் எவ்வித கட், ரீடேக் எதுவும் இல்லாமல் படமாக்கப்பட்டதுதான்.

சமூக சிந்தனையுள்ள இப்படம் முழுவதும் ஒரே இடத்தில் திகிலூட்டும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகளால் யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

சமீபத்தில், இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் 'அசிஸ்ட் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் அதன் ஆண்டுவிழாவில் அகடம் படக்குழுவினரை சாதனைச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தியது.

'கின்னஸ் உலக சாதனை' நிறுவனம் ஏற்கனவே இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனைப்படத்தை கன்னடம் மற்றும் இந்தி பட உலகிற்கும் கொண்டுசெல்லும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

திரைப்படத்திற்கும், நாடகத்திற்கும் சில இலக்கணங்கள் உண்டு, ஒரே சாட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டால் அது நாடகமாகவே அமையுமே அல்லாமல் திரைப்படமாக அமையாது என்பது கவனிக்கத்தக்கது.

shared via

Sunday, October 27, 2013

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

இஸ்தான்புல், அக். 28-

2.51 மீட்டர் (8 1/4 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளவர் சுல்தான் கோசென். துருக்கி நாட்டில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் பருவத்தே பயிர் செய்ய விரும்பி தகுந்த பெண்ணை தேடி வந்தார்.

ஆனால், இவரது உயரத்தை கண்டு மிரண்ட பல பெண்கள் இவருக்கு கழுத்தை நீட்ட மறுத்து விட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய், இனி காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்த சுல்தான் கோசென், தற்போது தனது 30வது வயதில் மெர்வோ டிபோ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பிலேயே, கண்ணும் கண்ணும் ஒட்டிக்கிச்சு.. காதல் வந்து பத்திக்கிச்சு என்ற உணர்வு மெர்வோ டிபோவை வாட்டி வதைக்க சுல்தான் கோசென்-னை திருமணம் செய்துக் கொள்ள அவர் சம்மதித்துள்ளார். பொறுத்தது போதும் - பொங்கி எழு என்ற ரீதியில் சுல்தான் கோசென் அவசர கதியில் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தன்னை விட 2 1/2 அடி (30 அங்குலம்) உயரம் குறைவான காதலியை மணம் முடிக்கும் விழாவுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்களையும் இவர் அழைத்துள்ளார்.

திருமண உடைகள் உள்ளிட்ட எல்லா வேலையையும் முடித்து விட்ட சுல்தான் கோசென் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர்வலம் போக உயரமான காரை தேடிக் கொண்டிருக்கிறார்.

...

shared via

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

துபாய், அக். 28-

பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன் மாதத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து மட்டுமே கையாளப்பட்டு வந்தது.

இங்கிருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 5 3/4 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத அல் மக்தூம் விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது.

பணிகள் நிறைவடைந்த பின்னர் 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 16 கோடி பயணிகளையும் 1.2 கோடி டன் சரக்குகளையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

...

shared via

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

புதுடெல்லி, அக். 27-

உலகின் மிக பிரபலமான கார் பந்தயம் பார்முலா 1 கார் பந்தயமாகும். 19 சுற்றுகலாக நடத்தப்படும் இப்போட்டியின் 16-வது சுற்றான இந்தியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம் இன்று டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்தது.

2011-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இரண்டு போட்டிகளிலும் செபஸ்டியன் வெட்டலே வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் இன்று நடந்த இப்போட்டியிலும் ரெட் புல் அணி சார்பக கலந்துகொண்ட ஜெர்மனியின் இளம் வீரர் செபாஸ்தியன் வெட்டல் அதிக புள்ளிகள் பெற்று இந்தியன் கிராண்ட் பிரீ சாம்பியன்ஸ் கோப்பையை
தொடர்ந்து மூன்றாவது முறையாக தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் ஹாட்ரிக்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தை மெர்சிடிஸ் அணியை சேர்ந்த ரோஸ்பெர்க்கும், மூன்றாவது இடத்தை லோடஸ் அணியை சேர்ந்த குரோஸ்ஜீனும் பெற்றனர்.

தொடர்ந்து 4 உலக சாம்பியன் கோப்பைகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இச்சாதனையை ஜுவான் மேனுவல் பேங்கியோவும், மைக்கேல் சூமேக்கரும் செய்துள்ளனர்.

...

shared via

Thursday, October 24, 2013

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி, அக். 25-

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்.

அரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த இவர் பிளஸ்-2 தேர்வில் 940 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றர். இவருக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படிப்பில் இடம் கிடைத்தது. இந்த கல்லூரியில் சேர்ந்த அவர் தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இதுதொடர்பாக மாணவி கல்கி கூறியதாவது:- நான் சிறுமியாக இருந்த போது எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்வதே மிகவும் அரிது. இருந்தபோதிலும் பிற சிறுவர் - சிறுமிகளை போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என நான் அடம் பிடித்ததால் என்னை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.

பல்வேறு தடைகளை சந்தித்த போதும் அவற்றை சமாளித்து நன்றாக படித்த எனக்கு இப்போது அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தபின்னரும் கல்லூரி மாணவ - மாணவிகள் என்னிடம் சகஜமாக பழகுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடையே கல்வி தொடர்பான விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம். நான் பட்டப்படிப்பை முடித்த பின்னர் வக்கீலுக்கு படிக்க விரும்புகிறேன் .

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Friday, October 18, 2013

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்! Cancer

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன என்று தெரிய வந்தது.

இதற்கிடையில் புற்று நோய் வகைகளை நாம் அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.

நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.

இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.

இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.

உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.

புற்றுநோய்க்கான புற காரணிகள்:-

காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.

இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.

ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.

உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.

இதற்கிடையில் நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதும இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகி விட்டது. அதாவது நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.

அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.

தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.

காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.

தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவித்யா

aanthaireporter

shared via