Tuesday, August 6, 2013

அமெரிக்காவின் மேயர் 4 வயது சிறுவன்

தகவல் புத்தகம்:
அமெரிக்காவின் மேயராக 4
வயது சிறுவன்
மீண்டும் தேர்வு -

அமெரிக்காவின்
மின்னெசோட்டா
பகுதியிலுள்ள டார்செட்
என்ற சிறிய நகரின்
மேயராக 3
வயது சிறுவனான
ராபர்ட் பாபி டஃப்ட்ஸ்
என்பவன் கடந்த
ஆண்டு நியமிக்கப்பட்டான்.

குறைந்த மக்கள்
தொகையை கொண்ட
டார்செட் நகருக்கு என
தனி அரசோ,
அரசு நிர்வாகமோ
கிடையாது என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த
ஆண்டு மேயர் தேர்தலில்
தற்போது 4 வயதாகும்
ராபர்ட் பாபி டஃப்ட்ஸ்
போட்டியிட்டான். இந்த
தேர்தலுக்காக டார்செட்
நகரில் உள்ள கடைகளில்
வாக்கு பெட்டிகள்
வைக்கப்பட்டன.

ஒரு டாலர்
செலுத்தி நகர மேயராக
யார் வர வேண்டும்?
என்பதை மக்கள்
வாக்கு பெட்டிகளில்
எழுதி போட்டனர்.

இந்த
பெட்டிகளில் உள்ள
வாக்கு சீட்டுகள்
அனைத்தும்
ஒரு தொட்டியில்
போட்டு நன்றாக
குலுக்கப்பட்டன.
துணியால் கண்கள்
கட்டப்பட்ட ஒரு நபர்
தொட்டியில்
இருந்து ஒரு வாக்கு
சீட்டை எடுத்தார்.

அந்த
சீட்டில் தற்போதைய
மேயராக உள்ள
சிறுவனின் பெயரே இடம்
பெற்றிருந்ததால் அவனே அடுத்த
மேயராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டதாக
தேர்தல் நடுவர்கள்
அறிவித்தனர்.

தொடர்ந்து 2வது முறை
டார்செட் நகர மேயரான
மகிழ்ச்சியை ராபர்ட்
பாபி டஃப்ட்ஸ் ஐஸ்கிரீம்
சுவைத்தபடியே
கொண்டாடினான்.
:-)

No comments:

Post a Comment