Monday, August 26, 2013

"கண்தானம்" ஒரு விளக்கம் eye donation

தமிழால் இணைவோம்:
"கண்தானம்" ஒரு விளக்கம்

1. எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.
2. கண்ணாடி அணிந்தவர்கள். கண்நோய் உள்ளவர்கள். காட்ராக்ட் புரை உள்ளவர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் போன்ற அனைவரும் கண்தானம் செய்யலாம்.
3. தானம் கொடுப்பவர் இறந்து ஆறுமணி நேரத்திற்குள் அவரது கண்கள் தானம் செய்யப்பட வேண்டும். இறந்தவரின் நெருங்கிய உறவினர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதி அவசியப்படுவதால் தாமதம் செய்யாமல் அருகாமையில் உள்ள கண்வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
4. கண்வங்கியை தொடர்பு கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்ப்பட்டால், ஈரநெஞ்சம் அமைப்பிற்கு பினவரும் அலைபேசி எண்கள் மூலம் 9843344991 , 9894014145 , 9994181515 ,( வாலண்டியர்ஸ் ) எவரையேனும் உடனே தொடர்புகொள்ளவும்.
5. இறந்தவரின் கண்களை மூடி, ஈரபஞ்சு வைத்து கட்டி வைக்க வேண்டும்ம். பஞ்சு உலர்ந்துவிடாமல் தேவைப்படும்போது ஈரம் சேர்க்கவும். இறந்தவரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
6. கண்களை எடுக்க தனி அறையோ, தனி இடமோ தேவை இல்லை. மருத்துவர்கள் நேரில் வந்து 15 நிமிடத்திற்குள் கண்கள் எடுக்கும் பணியை முடித்துவிடுவார்கள்.
7. செயற்கை கண்கள் உடனே பொருத்துவதால், முகத்தில் எந்தவித குறையோ மாற்றமோ இருக்காது.
8. கண்தானம் செய்ய பதிவு செய்து கொள்வது ஒரு உயரிய எண்ணம், பிறரையும் ஊக்குவிப்பது ஒரு உயரிய செயல்.
9. கண்தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான ஒரு பதிவு.

நன்றி
~ஈரநெஞ்சம்

Information about eye donation

1. All ages can donate their eyes.

2. Everyone can donate eyes. Even people who wear eyeglasses, or with eye problem, with cataract, or who have had surgery.

3. Dead donor’s Eyes must be donated within 6 hours. Permission from family or close relatives needed to proceed further, therefore Inform immediately to the close by eye bank without delay.

4. If you have any difficulty in communicating with the eye bank, please contact Eera Nenjam immediately using the following mobile numbers 9843344991, 9894014145, 9994181515, (Volunteers).

5. Close the deceased's eyes and place wet cotton balls on them and tie. To keep them moist add wet sponge when needed. The deceased's body does not need to be taken to the hospital.

6. There is no need for a separate room or separate space to remove the eyes. The eye doctors will arrive and finish the task within 15 minutes. 7. It will be fitted with artificial eyes; therefore the face won’t have any changes or won’t look defected.

8. Registering for eye donation is a superior idea, and it is also a superior action to encourage others.

9. This post is to bring awareness for the eye donation.

Thank you.

~Eera Nenjam


Visit our Page -► தமிழால் இணைவோம்

..................................................................................

No comments:

Post a Comment