Sunday, September 29, 2013

கூகுள் மாயக் கண்ணாடி google majic mirror

கூகுள் மாயக் கண்ணாடி

by tnkesaven

பூவே பூச்சூடவா படத்தில் நதியா அணிந்து வந்த கண்ணாடி பற்றி ஞாபகம் இருக்கிறதா?

"இந்தக் கண்ணாடி வழியே பார்த்தால், ஆடையில்லாமல் தெரியும்," என்று நதியா அடித்துவிட,
அவரைப் பார்த்தாலே எஸ்.வி.சேகர் ஓடி ஒளிவார்.
அது போன்ற அபூர்வக் கண்ணாடி, "கூகுள் ஆண்டவ"ரின் புதிய அறிமுகம்.
அது ஒரு மூக்குக் கண்ணாடி.
புளூடூத் கருவியைவிட, கொஞ்சம் பெரியது இந்த கூகுள் கிளாஸ்.

இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டால், இனிமேல் ஒவ்வொரு விஷயத்துக்கும் "கூகுள் கூகுள் பண்ணிப் பார்க்க" வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில், சும்மா ஒரு கண்ணசைவே போதும். கேட்டது கையில் கிடைக்கும், அதுதான் கூகுள் கிளாஸ்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.

இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது.

5 மெகாபிக்ஸல் கொண்ட கேமெரா, வீடியோ பதிவுக் கருவிகள், வைஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கூகுள் கிளாஸுக்கு "ஜே" போட வைக்கின்றன.

இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, "ஒகே. கிளாஸ்" என்று சொன்னால் போதும், உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும்.

இதைக்கொண்டு பாட்டு கேட்கலாம், திசையறியலாம், வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம்,

திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம்.

ந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன.

"டேக் எ பிக்சர்" என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். ஏன் நீங்கள் பார் நண்பர்க்கும் காட்சியை, உங்கள்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.

இந்தக் கண்ணாடியின் தனித்துவம், இது சிறப்பான குரல் அடையாளம் காணும் வசதியைக் கொண்டுள்ளதுதான்.

இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும். ஒரே விஷயம்

வலைத்தளங்களை பார்க்க முடியாது.

அதற்கு ஈடாக, இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிப்பதற்கு ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி தேவை.

இந்த கூகுள் கிளாஸில் சில பிரச்சினைகளும் உணடு.

நம் கண்களுக்கு ஒரு செ.மீ. முன்னால் குறுஞ்செய்தி ஒளிர்ந்தால், முதலில் பார்ப்பதற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது சீக்கிரமே பழகிவிடும் என்கிறார்கள்.

சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன்படுத்தலாமாம்.

குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை.

தொலைபேசிக் கருவியை கையில் எடுக்க வேண்டியதும் இல்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனம் சிதறலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதனால் மனப்பதிவு, மனித மூளைச் செயல்பாடு போன்ற பல விஷயங்களுக்கு மதிப்பு குறைந்து போகும்

அடுத்தவரின் அந்தரங்கத்துக்குள் தலையிடும் என்ற அச்சமும், சமூக இழுக்காக கருதப்படலாம் என்ற எதிர்மறைத்தன்மையும் மையக்கூடும்.
. இப்போதைக்குப் போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கூகுளின் Glass Project Explorer Kit வழங்கப்படுகிறது. .
இதன் தற்போதைய மதிப்பு ரூ. ஒரு லட்சம்.

courtesy;''the indhu

Show commentsOpen link

முதல் 20 இணைய தளங்கள்..!! World top 20 websites

முதல் 20 இணைய தளங்கள்..!!
by veni
ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday, 12:57

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா?

அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.

1. Facebook.com:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

2. Google.com:

78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

3. Youtube.com:
பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

4. Yahoo.com:
இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

5. Wikipedia.org:
46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.

6. Live.com:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

7. QQ,com:
சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
8. Micorosoft.com:
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

9. Baidu.com:
வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

10. MSN.com:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.
11. Blogger.com:
மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.

12. Ask.com:
21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது.

13.Taobao.com:
20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது.

14. Twitter.com:
ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம்.

15. Bing.com:
மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.

16. Sohu.com :
சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
17. Apple.com:
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம்.
18. WordPress.com:
17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.

19. Sina.com.cn:
மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.
20.Amazon.com:
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

The post முதல் 20 இணைய தளங்கள்..!! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Saturday, September 28, 2013

பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...tamil house maintanence tips

பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...

by Marikumar

வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும். இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும்.

இப்படி வீட்டின் சுவர்களில் இருந்து அச்சமூட்டும் பல்லியை விரட்டுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அதனைப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் சிறந்தது என்பதைப் புரிந்து, அந்த வழியிலேயே பல்லியை விரட்ட வேண்டும். மேலும் பல்லியை விரட்ட பல அருமையான பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அத்தகைய பொருட்களைக் கொண்டு விரட்டினால், நிச்சயம் பல்லியை விரட்டிவிடலாம். இப்போது அத்தகைய பல்லியை விரட்டுவதற்கு பயன்படும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

காபித் தூளை புகையிலை பொடியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறு உருண்டைகளாக்கி, அதனை பல்லி அதிகம் வரும் இடத்தில் வைத்தால், அதனை பல்லி சாப்பிட்டால், பல்லி இறந்துவிடும்.

பாச்சா உருண்டை பூச்சிகள் வருவதைத் தடுக்கும் ஒரு சிறப்பான பொருள். இந்த பொருளை உடை அலமாரி, தண்ணீர் தொட்டி அல்லது அடுப்பிற்கு அடியில் வைத்தால், அது பல்லியை விரட்டிவிடும்.

பல்லிகளுக்கு மயில் இறகு என்றால் பயம். எனவே மயில் இறகை சுவற்றில் ஒட்டினால், அது பல்லி வருவதைத் தடுத்துவிடும்.

பெப்பரை நீரில் கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி வரும் இடங்களில் தெளித்தால், பல்லி அந்த மிளகுவினால் ஏற்படும் எரிச்சலுடன், அதிலிருந்து வெளிவரும் வாசனையால் வராமல் இருக்கும்.

நல்ல குளிர்ச்சியான தண்ணீரை பல்லியின் மீது தெளித்தால், அது பல்லியின் உடல் வெப்பநிலையை குறைத்து, அது நகர முடியாமல் தத்தளிக்கும். அப்போது அதனை வெளியே தூக்கி போட்டுவிடலாம்.

வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை பல்லி பதுங்கியிருக்கும் இடங்களில் போட்டால், வெங்காயத்தில் உள்ள சல்பர், துர்நாற்றத்தை உண்டாக்கி, பல்லியை வெளியேற்றி வராமல் செய்துவிடும்.

முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால், அதிலிருந்து வெளிவரும் வாசனையால், பல்லி வராமல் இருக்கும். குறிப்பாக முட்டை ஓட்டை 3-4 வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காயச் சாறு மற்றும் சிறிது தண்ணீரை ஊற்றி கலந்து, அதில் சிறிது பூண்டு சாற்றினை ஊற்றி, நன்கு குலுக்கி, பின் அதனை பல்லி வரும் இடங்களில் தெளித்தால், வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைக்கு பல்லி ஓடிவிடும். வேண்டுமெனில், சில பூண்டுகளை உரித்து அதனை மூலைகளில் வைத்தாலும் பல்லி போய்விடும்.

மேற்கூறியவற்றை செய்வதற்கு முன்பு, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் உள்ள அசுத்தத்தினாலேயே பூச்சிகள் பல வரும். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டாலே, பல்லியின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
Share |

Show commentsOpen link

Friday, September 27, 2013

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 83 வது பிறந்த நாள் (செப். 28, 1929) latha mankeshgar birthday

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 83 வது ப&#
by vijigermany
New Tamil
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 83 வது
பிறந்த நாள் (செப். 28, 1929)
.

இவர் 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்தூரில் பிறந்தார். இவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரும் ஒரு பாடகர்தான். லதா மங்கேஷ்கர் தனது 13வது வயதில், அதாவது 1942ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். அதன்பின்னர் தனது குடும்பத்தின் நெருங்கிய நண்பரான மாஸ்டர் வினாயக்கின் உதவியுடன், பாடகராகவும், நடிகையாகவும் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1948ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் அதிக அளவில் பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும் ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும் இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.

முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை.

பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Happy birthday Lataji

Show commentsOpen link

புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா? Brilliant child

புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா?
by veni
Google NewsToday, 17:46

பிறக்கிற குழந்தை புத்திசாலியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?

கரு உருவான 20-வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 -வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.

இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்''

குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை…

இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை. 'ருபெல்லா' என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு 'ருபெல்லா வேக்சினேஷன்' எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும்.

அதே போல் அவளுடைய 15-வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும். இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு!

இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறையலாம்.

மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும். இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்பதால்தான்.

இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ… அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!

The post புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா? appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Thursday, September 26, 2013

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?? What is Credit score ?

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன??

by Marikumar

இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்!!!

டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.

இந்த சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 91 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன்களை கட்ட தவறும் போது ஏற்பட போகும் விளைவுகளை பற்றி தெரியவில்லை என்று கிரெடிட் சுதார் என்ற முன்னணி கடன் ஆரோக்கிய மேம்பாடு நிறுவனம் கூறியுள்ளது.

8 நகரத்திலிருந்து 300 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த சர்வேயில், 85 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. இந்த செயலகம் கடன் வாங்கியவர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். பணம் கொடுப்பவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் (கடன் விஷயத்தில் அதை திருப்பி கொடுக்கும் அவர்களின்) நம்பகத்தன்மையை பற்றி தெளிவாக கூறி விடும்.

டெல்லி மற்றும் பூனேயில் நான்கில் ஒரு நபருக்கு இந்த கடன் செயலகத்தை பற்றிய அறிவும், புரிதலும் இருக்கிறது. இது போக டெல்லி, பெங்களூரு மற்றும் பூனேயில் சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 10 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன் மதிப்பீட்டின் புள்ளிகள் தெரிந்திருந்தது.

"இந்த சர்வே நடத்திய அடிப்படை காரணம், கடன் வாங்குபவர்கள் கடன் வலுக்குறைவுகளை சந்தித்திருந்தால் அதன் காரணத்தை பற்றியும் விளைவுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எதிர்மறையான கடன் விவரங்கள் மற்றும் குறைவான கடன் மதிப்பீட்டு புள்ளிகளால் அவர்களுக்கு கடன் அளிக்கப்படவில்லை என்ற காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று கிரெடிட் சுதார் நிறுவனத்தின் துணை நிறுவனர்களான அருண் ராமமூர்த்தி மற்றும் கௌரவ் வத்வாணி கூறியுள்ளார்கள்.

இந்த சர்வேயில் கடனின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அதற்கு காரணம் சர்வேயில் கலந்து கொண்டதில் ஒருவர் கூட தங்கள் அடையாளம் திருட்டு போனதற்கு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மேலும் கலந்து கொண்டவர்களில் 92 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் தங்களுக்கு அளித்துள்ள கடன் மதிப்பீட்டு புள்ளிகளை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.

இது போக சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 4 சதவீத பேர்கள் தான் கடந்த ஒரு வருடத்தில் தங்களின் கடன் மதிப்பீட்டு புள்ளிகளை கேட்டு அறிந்து வைத்துள்ளார்கள். அதே போல் 98 சதவீத பேர்களுக்கு மாதிரி கடன் அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்ட போது அதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"91 சதவீத வாடிக்கையாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று இந்த சர்வே எடுத்து காட்டியுள்ளது." என்று ராமமூர்த்தியும் வத்வாணியும் கூறியுள்ளார்கள்.

"வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் மதிப்பீடு மற்றும் கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகளை பற்றியும் அறிந்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் தொழில்முறை கடன் ஆலோசனை என்பது இந்தியாவில் இல்லை என்பதையும் இந்த சர்வே மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த கருத்தை வழங்க துவங்கினால் கடன் ஆலோசனை சேவைகளுக்கு அதிக இடங்கள் உருவாகும்." என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Share |

Show commentsOpen link

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!! Reduce body heat waters

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!
by Marikumar

முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.

ஆனால் இந்த உடல் வெப்பநிலையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இந்த அதிகப்படியான உடல் வெப்பத்தை வெப்ப அழுத்தம் என்றும் சொல்வார்கள். இத்தகைய உடல் வெப்பமானது அதிகம் இருந்தால், அது தானாக குறையாமல், வயிற்று வலி, உள்ளுறுப்புகளில் பாதிப்பு, பிம்பிள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் வெப்பமானது அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், அதிகப்படியான வெப்ப காலநிலை, அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் இத்தகைய உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில் பராமரிக்க முடியும். அதிலும் தண்ணீரை மட்டும் தான் பருக வேண்டும் என்பதில்லை, குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவதன் மூலமும், உடல் வெப்பத்தை தணிக்க முடியும்.

சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய சில ஜூஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் குறைக்க முடியும்.

சீரகம், உடல் வெப்பத்தை குறைக்கக்கூடிய தன்மை பெற்றவை. எனவே தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் தணிக்கலாம்.

எலுமிச்சை ஜூஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் வெப்பத்தை தணிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலம் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று தான் மோர். இத்தகைய மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்யும்.

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் உள்ள 95% தண்ணீர், உடல் வெப்பத்தை தணித்து, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களுள் மிகவும் சக்தி வாய்ந்த பானம் என்றால் அது இளநீர் தான். எனவே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், நாளடைவில் உடல் வெப்பமானது சீராக இருக்கும்.

உடலில் தண்ணீர் அதிகம் தேங்கினால், அது பெரும் தொந்தரவாகிவிடும். எனவே அத்தகைய தண்ணீர் தேக்கத்தை தடுக்க, குடிக்கும் தண்ணீரில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். முக்கியமாக உடல் வெப்பம் தணிக்கப்படும்.

புதினா ஜூஸ் என்பது உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் மிகவும் சிறப்பானது. ஏனெனில் புதினா குளிர்ச்சி தன்மையைக் கொண்டிருப்பதால், அது உடல் வெப்பத்தை தணித்து, உடலினுள் இருக்கும் உள்காயங்களை சரிசெய்யும். எனவே எலுமிச்சை ஸூஸ் போட்டு, அதில் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும்.

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை விரைவிலேயே குறைக்கலாம்.

கொதிக்க வைக்காத மாட்டுப் பாலை அப்படியே குடித்தால், உடல் வெப்பம் தணிவதோடு, செரிமான பிரச்சனை மற்றும் உடல் வறட்சியும் நீங்கும்.

இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது சோம்பை போட்டு ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பத்தினால் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம்.
Thatstamil
Share |

Show commentsOpen link

Parents should avoid telling these things to their children

Parents should avoid telling these things to their children - குழந்தைகளிடம் பெற்றோர் சொல்ல
by jv_66

பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்பு என்ற உணர்வு ஒன்று தான். பெற்றோர்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. பொறுப்பான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, வாழ்க்கையில் கடினமாக வேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள்.

பெருமைக்குரிய குழந்தையாக வளர்வது கடினமானதாக இருப்பது போலவே ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதும் கடினமானதாகும். கோபத்தின் வடிகாலாக பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகளை மனிதர்களால் மட்டுமே கூறமுடியும்.

இருப்பினும் இந்த கோபத்திற்கு ஆளாவது குழந்தைகள் மட்டுமே. இதனால் ஒரு நிலையற்ற, சமாளிக்க முடியாத விளைவுகள் குழந் தைகளிடையே ஏற்படுகிறது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்போதும் சொல்லக் கூடாதவைகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப்படித்து அவற்றை குழந்தைகளிடம் சொல்வதை தவிர்த்திடுங்கள்.

1. நான் உங்கள் வயதில் இருந்த போது, மிகவும் பொறுப்பாக இருந்தேன்!

மேற்கூறியவற்றையே பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வது. இவ்வாறு குழந்தையின் திறமையை தங்களுடன் ஒப்பிட்டு சொல்வது பெற்றோர்கள் செய்யும் முதல் தவறு ஆகும். பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்புகளினால் குழந் தைக்கு முதலில் வருவது எரிச்சல் மட்டும் தான்.

ஆகவே அப்போது நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகளை எல்லாம் நினைவுப்படுத்தி பார்த்து, அப்பொழுது உங்கள் பெற்றோர்களுக்கு உண்டான தொந்தரவுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். மேலும் குழந்தையிடம், வீட்டில் நீ தான் மூத்தவனாக இருப்பதால் எப்படி உறவுமுறைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தையின் நம்பிக்கை உடைந்துவிடுகிறது.

2 .நீ எப்போதுமே தவறான முடிவுகளையே எடுப்பாய்!

முதலில் இவ்வாறு கூறி குழந்தையின் பக்குவப்படாத வயதிற்காக தண்டனையை அளிக்கக்கூடாது. உண்மையில் கற்கின்ற போது எல்லோருமே தவறு செய்வது சகஜமான ஒன்று தான்.

ஒருவேளை குழந்தைகள் வேலை செய்ய எடுத்துக் கொண்ட கல்வித்துறை ஆர்வமூட்டுவதாக இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் எடுத்துக்கொண்ட கல்வித்துறையின் கம்பெனி மிகவும் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம்.

அதனால் அவர்கள் எடுத்துள்ள தீர்மானத்தில், அவர் களை குற்றம் சொல்ல வேண்டு மென்பது இல்லை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய, உங்களின் கருத்துக்களை ஏற்க கட்டாயப்படுத்தக்கூடாது.

3.ஏன் நீங்கள் ஒரு சகோதரன்/சகோதரி போன்று இருக்க முடியாது?

இது மீண்டும் ஒரு நியாயமற்ற ஒப்பீடாகும் மற்றும் இதுவும் பொதுவாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கிடையே அவர்களின் திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும்.

ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால் உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.ஆகவே குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளைத் தவிர்க்கலாம்.

4.என்னை தனியாக இருக்கவிடுங்கள்!

குழந்தைகள் கவலை மற்றும் பொறுப்புகள் இல்லாமல் அப்பாவித்தனமாக இருப்பார்கள், அதனால், பெரியவர்களுக்கு குழந்தைகளைப்பார்த்து கொள்ள வேண்டிய பெரிய பொறுப்புகள் உண்டு. அதே சமயம், சில நேரத்தில் நாம் தனிமையை விரும்பக்கூடும்.

அப்பொழுது குழந்தைகள் இதுபோன்ற சூழல்களை புரிந்து கொள்ளும் திறனற்று இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து அவசரப்பட்டு, `என்னை தனியாக இருக்கவிடு`, என்று எரிச்சல்பட்டு சொல்வது, குழந்தைக்கு புறக்கணிக்கப்பட்ட மற்றும் தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். ஆகவே இதுபோன்ற சமயத்தில் சிறிது பொறுமையாக இருந்து குழந்தையிடம் கோபமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

5.நீங்கள் உங்களை கண்டு வெட்கப்பட வேண்டும்!

இது மாதிரி வெளிப்படையாக மிகக்கடுமையாக மற்றும் மோசமாகப் பேசுவது, சாதாரணமாக எந்த ஒரு குழந்தைக்கும் தவறாகத் தான் தோன்றும். ஆம், சில குறும்புக்கார குழந்தைகளிடம் நச்சரித்து துளைத்தெடுக்கும் சுபாவம் மிக சாதாரணமாகக் காணப்படும்.

அதற்காக உங்களின் எதிர்ப்பை காண்பிக்க வேண்டுமென்பதில்லை. இந் நேரத்தில் குழந்தைக்கு நல்லது மற்றும் கெட்டது என இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை புரிய வைக்க சிறந்த மற்றும் பொறுமையான வழிகள் பல உள்ளன.

6.நீங்கள் உங்களது தந்தை/தாய் போலவே தான் இருக்கிறீர்கள்

திருமணமான அனைத்து தம்பதிகளும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில்லை. பெரும்பாலானோர் வெறுப்பினால் அவர்களது உறவுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் எதிராக கொடூரமாக வார்த்தைகளால் பேசிக்கொள்கின்றனர்.

இதனால் சில உறவுகள் இறுதியில் பிரிந்தும் விடுகின்றன. எவ்வாறு பார்த்தாலும், குழந்தைகள் இந்த பரஸ்பர விரோத போக்குக்கு மற்றும் விமர்சனங்களுக்கு ஒரு சாட்சியாகின்றனர். அதனால் உங்களுக்கு இடை யேயான விரோதத்தை, உங்கள் குழந்தை மீது காண்பித்தால், அது உங்கள் மீதான மரியாதையை இழக்கச்செய்யும்.

7.நீங்கள் எப்போது என்னை காயப்படுத்தலாம் என்ற நேரத்தை நோக்கியிருக்கிறீர்கள்!

குழந்தைகள், பெற்றோர்களை புண்படுத்தும் வகையில், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செய்வதன் மூலம், பெற்றோர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் நேரங்கள் இருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இது எதிர்பாராவிதமாக நடந்தாலும், சில சமயத்தில் குழந்தைகள் வேண்டுமென்றே செய்கின்றன.

எனினும், மேலே கூறப்பட்ட வார்த்தைகளைப் போன்று குழந்தைகளிடம் சொல்வதன் மூலம், அவர்களுடைய மனதில் குற்ற உணர்வு கொள்ளச்செய்து விடுகிறது. இதனால் அவர்கள் உங்களது கோரிக்கைகளுக்கு இணங்கி உங்களை மகிழச் செய்வார்கள்.

ஆனால் நீங்கள் அவர்களுடைய உரிமைக்கான மகிழ்ச்சியை நீண்ட காலமாக பறித்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் குழந்தைகளை தங்களுடைய சொந்த எண்ணத்தின் படி வாழவிட்டு, அவர்களை குற்றமற்ற வாழ்க்கை வாழ விடுங்கள்.

8.உங்களைப் போன்ற ஒரு குழந்தை இருப்பதை விட குழந்தையில்லாமல் இருப்பதே மேல்

மேலே சொல்லப்பட்டது போல் அவசரப்பட்டு சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தைகள் பெரும்பாலும் தீவிர உணர்ச்சி வசப்படுகின்றனர். மேலும் இது அவர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், அப்படிச் சொல்வது மனம் மிகவும் புண்படுத்தும் விதமாக இருப்பதால், குழந்தைகளிடம் இது போல் ஒருபோதுமே சொல்லக்கூடாது. எந்தவிதமான நெருக்கடியாக இருந் தாலும், இப்படி ஏதாவது சொல்வதன் மூலம், இறுதியில் அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படச் செய்து விடும்.

9.கெட்ட நண்பர்களின் சகவாசத்தை விட்டுவிடவும்!

பெற்றோர்களும் ஒருவரை நண்பராக்குவதற்கு முன்பு யோசனைச் செய்வதில்லை. அதுபோலவே குழந்தைகளும் செய்கின்றனர். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நமக்கு ஏற்படும் கெட்ட நண்பர்களின் சகவா சத்திலிருந்து எப்படி விட்டு விலக வேண்டுமென்று நமக்கு தெரியும்.

ஆனால் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு நண்பர்களே உலகம், எனவே நீங்கள் வெறும் அதிகாரத்தினால் `நல்ல' நண்பர்களைப் திரும்பவும் பெற வேண்டும் என்று அவர்களிடம் கூற முடியாது.










Show commentsOpen link

Wednesday, September 11, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? Online aathar card updation

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்


( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)


சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Sunday, September 1, 2013

உடல் எடையைக் குறைக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்! Reduce weight


தற்போது அனைவருக்குமே உடல் பருமன்
பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல்
எடையை குறைப்பதற்கு பலர்
கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும்
டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல்
இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால்,
எந்த ஒரு பலனும் கிடைக்காது.

எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக
செயல்பட வேண்டும். ஆம், எப்போதும்
கடுமையான உடற்பயிற்சி மற்றும்
டயட்டை மேற்கொண்டால்,
உடலுக்கு வேண்டிய
சத்துக்களானது கிடைக்காமல், உடல்
மிகவும் சோர்வடைவிடும். இதனால்
உடல் எடை குறைகிறதோ இல்லையோ,
பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம்
சந்திக்க நேரிடும்.
எனவே அளவான உடற்பயிற்சியுடன்,
ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல்
எடையை நிச்சயம் குறைக்கலாம்.
அதிலும் இதுவரை எத்தனையோ உடல்
எடையை குறைக்கும் உணவுப்
பொருட்களைப் பார்த்திருப்போம். ஆனால்,
இப்போது பார்க்கப்போவது பலரும்
நினைத்துப் பார்க்காத உடல் எடையைக்
குறைக்கும் சில உணவுப்
பொருட்களைத் தான். இத்தகைய உணவுப்
பொருட்களை சாப்பிடுவதோடு,
அத்துடன் தினமும் சரியான அளவில்
உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டும். ஏனெனில் உடல் எடையைக்
குறைப்பதற்கு உணவுகள் மட்டும்
உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும்
பின்பற்றுங்கள்.

சரி, அந்த உணவுப் பொருட்கள்
என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக
இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்
காளான்
உடல் எடையை வேகமாக குறைக்க
உதவும் உணவுப் பொருட்களில்
ஒன்று காளான். இந்த காளானை உணவில்
அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள
குறைவான கலோரி மற்றும்
கொழுப்புக்களால், உடல்
எடை அதிகரிக்காமல் இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில்
கார்போஹைட்ரேட் குறைவாகவும்,
வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம்
இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம்
நிறைந்துள்ளது. எனவே தினமும்
உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர்,
முட்டையின்
வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின்
சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம்
பசிக்காமலும் தடுத்து, உடல்
எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க
உதவும்.

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,
மருத்துவரை பார்க்க வேண்டிய
அவசியமே இருக்காது.
அதே ஆப்பிளை தினமும்
சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும்
கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ஏனெனில்
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்,
அது உடலில் தங்கும் தேவையில்லாத
கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன்
அதிகரிப்பதை தடுக்கும்.

பாகற்காய்
பாகற்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்ற
உடல் பருமனால் அவஸ்தைப்படுவோரு
க்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில்,
பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள
சத்துக்களானது, உடலில் தங்கும்
தேவையற்ற கொழுப்புக்கள்
தங்குவதை கரைப்பதோடு,
கலோரிகளையும் எரித்துவிடும்.

பட்டை
பட்டையை உணவில் சேர்த்தால்,
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு,
உடல் எடையை குறைக்கவும் உதவும்.

எனவே இநத் மசாலாப்
பொருளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

மிளகாய்
அனைவருக்குமே காரம் என்றால்
மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட
ஒரு வகையில் உடல் எடையைக்
குறைக்க உதவியாக இருக்கும்.

அதிலும்
குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில்
சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த
மிளகாயில் உள்ள பொருளானது,
உடலில் தங்கியிருக்கும்
கொழுப்புக்களை கரைத்து,
டாக்ஸின்களை வெளியேற்றி, உடல்
எடை குறைய உதவியாக இருக்கும்.

முள்ளங்கி
முள்ளங்கியை வேக
வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள
நார்ச்சத்துக்கள
ானது அப்படியே கிடைத்து, உடலில்
உள்ள கெட்ட கொழுப்புக்களானத
ு கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம்
பசியெடுக்காமலும் இருக்கும்.
டார்க் சாக்லெட்
அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள்
அதிகம்
உள்ளது என்று சாப்பிடுவதில்லை.
ஆனால் உண்மையில் டார்க்
சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல்
எடை குறைவதோடு, இதயத்தையும்
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள
முடியும்.

பச்சை பயறு
அனைத்து சமையலறைகளிலும்
கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின்
நிறைந்த உணவுப் பொருள் தான்
பச்சை பயறு. உடல் எடையை குறைக்க
நினைப்போர்,
உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு,
பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால்,
நல்ல பலன் கிடைக்கும். மேலும்
இது செரிமானத்திற்கும் மிகவும்
நல்லது.

வீட்டு வாடகை சட்டம் – ஓர் ஆய்வு house rent act

வீட்டு வாடகை சட்டம் – ஓர் ஆய்வு..!
வீட்டுச் சொந்தக்காரரும்,
குடித்தனக்காரரும்
பகைமை பாராட்டாமல் இருக்க சில
விஷயங்களை அறிந்துவைத்துக்
கொள்வது அவசியம்!
இதுகுறித்து சென்னையின்
முன்னணி வழக்கறிஞரான பி.பி.
சுரேஷ்பாபுவை சந்தித்துப்
பேசினோம்…

கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
என முக்கியமானவற்றை பட்டியல்
போட்டுச் சொன்னார் அவர்.

அக்ரிமென்ட்
அவசியம்..! ‘ ‘வீட்டு உரிமையாளர்,
வாடகைக்கு வருபவர் இருவரும் முத
லில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக்
கொள்வது மிக அவசியம்.

பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்
போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம்
இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ்
வாங்கிவிட்டார் என்பார்.
வீட்டு உரிமையாளர்
அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார்.

யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம்
வந்துவிடு ம். அதனா ல், 20 ரூபாய்
முத்திரைத் தா ளில் முன்பணம், மாத
வாடகை எவ்வள வு என்பதை எல்லாம்
அக்ரிமென்ட் ஆக எழுதிக்
கொள்வது அவசி யம்.
பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள் 11
மாதத்திற்குதான் அக்ரிமென்ட்
போடுவார்கள். அதென்ன 11 மாத
கணக்கு என்கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்
பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர்
அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும்
என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம்
போடப்படுகிறது.

மற்றபடி சிலர் நினைப்பதுபோல
ஒரு வருடத்துக்கு மேலாக ஒருவர்
தொடர்ந்து வாடகைக்கு இருந்து விட்டா
அது அவர் அந்த
வீட்டை உரிமை கொண்டாட உதவுவதாக
அமைந்துவிடும் என்பதால் அல்ல!
அப்படி எல்லாம் ஒன்றும்
உரிமை கொண்டாடிவிட முடியாது.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில்
குடியிருந்தாலும், அவருக்கு அந்த
வீடு சொந்தமாக சட்டத்தில்
வழியே இல்லை!
பதிவுக்கட்டணம் எவ்வளவு?
அக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை,
பராமரிப்புக் கட்டணம் தவிர
வேறு ஏதாவது கட்ட ணங்கள் இருந்தால்
அதையும் கட்டாயம் குறிப்பிட
வேண்டும்.
உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான
ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான
மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர
கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த
தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய
வேண்டும். இதற்கு சுமாராக
ஒரு சதவிகித ம் கட் டணம் செலுத்த
வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப்
பொதுவாக மூன்றாண்டுகள் முதல்
பத்து, பதினைந்து ஆண் டுகள்
வரை போட்டுக் கொள்ளலாம்.
அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய
வேண்டும் என்றால், இரு தரப்பினரும்
சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.

அதனால், கூடுமான
வரை ஆரம்பத்திலேயே தேவை யான
அனைத்து விஷயங்களையு ம் அதில்
சேர்த்துவிடுவது நல்லது.
அட்வான்ஸ் ”வீட்டுக்கான அட்வா ன்ஸ் பெற
வரம்பு எதுவும் நிர்ண யிக்கப்
படவில்லை. சந்தை நில வரத்தைப்
பொறுத்தே இது இருக் கிறது.
சென்னை போன்ற நகரங்களில் மாத
வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற
நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும்
அட்வான்ஸ் வாங்கு கிறார்கள்.

பேரம்
பேசி குறைக்க முடிந்தால்
அது அவரவர்கள் சாமர்த்தியம்!
”வாடகை!
”வீட்டு வாடகையை பொதுவாக
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்த
அதிகரித்துக் கொள் ளலாம்.

அதே நேரத்தில்
வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல்
வசதிக ள் செய்து கொடுத்தாலோ வாட
கையை அதிகரிக்க எந்தத் தடையும்
இல்லை.

புதிதாக கட்டிய
வீட்டுக்கு ஐந்து ஆண்டு கள்
வரை வாடகை நிர்ணயிப்பதில்
எவ்விதக்கட்டுப்பாடும் இல்லை. வீட்டின்
உரிமையாளர் விரும்பும்
தொகையை வாடகையாக வைத்துக்
கொள்ளலாம். அதேசமயம்,
ஏற்கெனவே உள்ள வசதிக ள்
குறையும்போது வாடகையைக்
குறைக்கச்
சொல்லிவீட்டு உரிமையாளரை குடித்த
கேட்கலாம்.

அதாவது தினசரி தண்ணீர் வந்த
நிலையில் தந்த வாடகையை ஒரு நாள்
விட்டு ஒருநாள் தண்ணீர்
வரும்போது குறைக்கச் சொல் லலாம்;
கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார்
பார்க்கிங் ஆக மாறினால் வாட
கையை குறைக்கச் சொல்லி கேட்கலா ம்.
அதற்குக் குடித்தனக்காரரு
க்கு உரிமை உண்டு. ரசீது அவசியம்!
வாடகைக்குப் போகிறவர் முன்பணம்
தொடங்கி அனைத்துக்கும்
உரிமையாளரிடம் ரசீது பெற்றுக்
கொள்வது அவசியம். இதற்காக அச்சடி த்த
ரசீதுகள் எதுவும் தேவையில்லை.

சாதா ரண வெள்ளைத் தாளில்
எழுதி வாங்கிக்
கொண்டாலே போதுமானது.
தேவைப்பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப்
ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும்
வாடகை நியாயமானது இல்லை என்கிற
போது சென்னைவாசிகள் என்றால்,
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில்
இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரலாம். மற்ற
மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப்
நீதிமன்றங்களை அணுகலாம்.
வாடகைதர மறுத்தால்..?
‘வீட்டு உரிமையாளருக்கும்
குடித்தனக்காரருக்கும்
இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்ச
ே இல்லாம ல் போய்விடுவதும் உண்டு.
அது போன்ற நேரங்களில்
வீட்டு உரிமையாள ரின் வங்கிக் கணக்கில்
வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.
வங்கிக் கணக்கு பற்றிய விவரம்
கிடைக்கவில்லை எனில் மணியார்டர்
செய்யலாம். அதையும் வாங்க
மறுத்து திருப்பி அனுப்பினால்
சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட்
செய்து வந்தால் குடித்தனக்காரர்
மீது வீட்டின் உரிமையாளர் குற்றம்
எதுவும் சொல்ல முடியாது.
இதேபோல், வாடகைக்கு இருப்பவர்
சரியாக
வாடகை தரவில்லை அல்லது வாடகைய
வீட்டின் உரிமையாளர், நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக
தர வில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர்
சப்ளையை நிறுத்து வது சட்டப்படி தவற
நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெறமுடிய
காலி செய்ய வைக்க..!

குடியிருப்பவர்
வீட்டைக்காலி செய்யவேண்டும் என்றால்,
குறைந்தது ஒன்று முதல்
இரண்டு மாதங்களுக்கு முன்னால்
சொல்ல வேண்டும். இந்த
விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்ட
எழுதிக் கொள்வது நல்லது.
வீட்டின் உரிமையாளர், தன் சொந்தக்
காரணம், மகன்/
மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவ
வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
அதே நேரத்தில், வீட்டின்
உரி மையாளருக்கு அந்தப் பகுதியில்
வேறு ஒரு வீடு இருந்து,
அது காலியாக இருக்கும் பட்சத்தில்
வாடகைக்கு இருப்பவரை காலி செய்யஉர
வீட்டை இடித்துக்கட்டுவது என்றால்
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம்
அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்
தான் வீட்டை காலி செய்யச்சொல்ல
முடியும்.
வீட்டைக்காலி செய்த
பிறகு இடிக்கவில்லை என்றால்,
ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அத
குடி அமர்த்த வேண்டும்.
வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய
வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால்
அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும். வீட்டின் உரிமையாளர்
ஒருவேளை தவறான தகவல்
கொடுத்து காலி செய்ய வைத்தால்,
குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர
வாய்ப்பிருக்கிறது.
வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர்
குறைந்தது நான்கு மாதங்கள்
வீட்டைப்பயன்படுத்தாமல்
பூட்டுபோட்டு வைத்திருந்தாலும்
வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
வீட்டை உள்வாடகைக்கு விடு வது பல
நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

இது குறித்தும்
ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில்
தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது.
வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக
பராமரிக்காமல்
கண்டபடி அழுக்காக்கினா ல்
அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின்
உரிமையாளர், இழப்பீடு பெற்றுக்கொள்ள
வழி இருக்கிறது.
இப்படி வீட்டை வாடகைக்கு விடுகி றவர
குடித்தனக் காரருக்கும் சட்டப்படி பல
உரிமைகள் இருக்கி றது.
அவை என்னென்ன என்பது தெரியாததால்
தான் பல சமயங்களில் மோதல்
வந்து விடுகிறது.
இப்போது தெரிந்து விட்டது அல்லவா?
இனி சுமூகம் தான்..!