Friday, August 30, 2013

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Albert Einstein

தமிழால் இணைவோம்:
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

மாணவன் அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.

உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

# ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...

-ஆதிரா

Visit our Page -► தமிழால் இணைவோம்

(Sent via Seesmic http://www.hootsuite.com)

Thursday, August 29, 2013

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல Hindi is not national language of India



இந்தியாவை போலவே பிஜி நாட்டிலும் இந்தியை திணிக்க அரசியல் சாசனம் திருத்தம். ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு .

இந்தியாவில் பெருவாரியான மொழிகளை அழித்த இந்தி தற்போது பிஜி நாட்டின் சொந்த மொழியை அழிக்க களமிறக்கப்பட்டுள்ளது !

Tuesday, August 27, 2013

145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு!

தமிழால் இணைவோம்:
145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு!

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் உருவாக்கிய இந்த தருமச்சாலையில் 145 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து மக்களின் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது அணையா அடுப்பு.

ஆறறிவுடைய மனித இனம், தன் இனம் பசியால் தவிப்பதை கண்ணெதிரே காணுகிறபோது கூட, "அது அவரவர் தலையெழுத்து, வினைப்பயன்' என்று வேதாந்தம் பேசியது. இப்படி பேசுவோர் மத்தியில் "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'என்று பாடிய வள்ளலார் பசிக்கொடுமையை ஒழிக்க முன்வந்தார்.

எல்லா ஜீவன்களிடமும் இறைவன் பொதுவாக விளங்குகிறார் என்பதை உணர்ந்து பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம். தான் கூறிய ஜீவகாருண்ய தத்துவப்படி, வள்ளலார் 1867, மே 23ல் சத்திய தருமச்சாலையை உருவாக்கினார். இங்கு ஜாதி, மதம், இனம், மொழி, தேசம், நிற பேதமின்றி அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு, ஏராளமானோரின் பசி போக்கப்படுகிறது.

via; Aatika Ashreen

Visit our Page -► தமிழால் இணைவோம்

Monday, August 26, 2013

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக! Deeth

தமிழ்ச் சமுதாயம்  -  தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

"கண்தானம்" ஒரு விளக்கம் eye donation

தமிழால் இணைவோம்:
"கண்தானம்" ஒரு விளக்கம்

1. எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.
2. கண்ணாடி அணிந்தவர்கள். கண்நோய் உள்ளவர்கள். காட்ராக்ட் புரை உள்ளவர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் போன்ற அனைவரும் கண்தானம் செய்யலாம்.
3. தானம் கொடுப்பவர் இறந்து ஆறுமணி நேரத்திற்குள் அவரது கண்கள் தானம் செய்யப்பட வேண்டும். இறந்தவரின் நெருங்கிய உறவினர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதி அவசியப்படுவதால் தாமதம் செய்யாமல் அருகாமையில் உள்ள கண்வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
4. கண்வங்கியை தொடர்பு கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்ப்பட்டால், ஈரநெஞ்சம் அமைப்பிற்கு பினவரும் அலைபேசி எண்கள் மூலம் 9843344991 , 9894014145 , 9994181515 ,( வாலண்டியர்ஸ் ) எவரையேனும் உடனே தொடர்புகொள்ளவும்.
5. இறந்தவரின் கண்களை மூடி, ஈரபஞ்சு வைத்து கட்டி வைக்க வேண்டும்ம். பஞ்சு உலர்ந்துவிடாமல் தேவைப்படும்போது ஈரம் சேர்க்கவும். இறந்தவரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
6. கண்களை எடுக்க தனி அறையோ, தனி இடமோ தேவை இல்லை. மருத்துவர்கள் நேரில் வந்து 15 நிமிடத்திற்குள் கண்கள் எடுக்கும் பணியை முடித்துவிடுவார்கள்.
7. செயற்கை கண்கள் உடனே பொருத்துவதால், முகத்தில் எந்தவித குறையோ மாற்றமோ இருக்காது.
8. கண்தானம் செய்ய பதிவு செய்து கொள்வது ஒரு உயரிய எண்ணம், பிறரையும் ஊக்குவிப்பது ஒரு உயரிய செயல்.
9. கண்தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான ஒரு பதிவு.

நன்றி
~ஈரநெஞ்சம்

Information about eye donation

1. All ages can donate their eyes.

2. Everyone can donate eyes. Even people who wear eyeglasses, or with eye problem, with cataract, or who have had surgery.

3. Dead donor’s Eyes must be donated within 6 hours. Permission from family or close relatives needed to proceed further, therefore Inform immediately to the close by eye bank without delay.

4. If you have any difficulty in communicating with the eye bank, please contact Eera Nenjam immediately using the following mobile numbers 9843344991, 9894014145, 9994181515, (Volunteers).

5. Close the deceased's eyes and place wet cotton balls on them and tie. To keep them moist add wet sponge when needed. The deceased's body does not need to be taken to the hospital.

6. There is no need for a separate room or separate space to remove the eyes. The eye doctors will arrive and finish the task within 15 minutes. 7. It will be fitted with artificial eyes; therefore the face won’t have any changes or won’t look defected.

8. Registering for eye donation is a superior idea, and it is also a superior action to encourage others.

9. This post is to bring awareness for the eye donation.

Thank you.

~Eera Nenjam


Visit our Page -► தமிழால் இணைவோம்

..................................................................................

Sunday, August 25, 2013

கணவன் சாப்பிட்ட இலையில் மணைவி சாப்பிட காரணம்

தமிழால் இணைவோம்:
திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

-Aatika Ashreen

Saturday, August 24, 2013

உலகிலேயே அழகான பெண்கள் - world beautiful girls

உலகிலேயே அழகானவங்க எந்த நாட்டு பெண்கள்னு உங்களுக்கு தெரியுமா?

10 வது இடம் - சைனா (1.88%)
9 வது இடம் - இங்கிலாந்து (2.35%)
8 வது இடம் - சவுத் ஆப்ரிக்கா (3.76%)
7 வது இடம் - நைஜீரியா (4.23%)
6 வது இடம் - அமெரிக்கா (6.57%)
5 வது இடம் - மெக்சிகோ (7.04%)
4 வது இடம் - பதில் சொல்ல விரும்பவில்லை (7.51%)
3 வது இடம் - -அரபு நாடுகள் (7.98%)
2 வது இடம் - பிலிப்பைன்ஸ் (15.02%)
1 வது இடம் - ????

*

Friday, August 23, 2013

சிகரட் விளம்பரம் - Cigrette Ads

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..

அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2 உங்களுக்கு முதுமையே வராது

3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்காடினார் நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி
நீதி பதியிடம் விளக்கம் அளித்தார் .


Wednesday, August 21, 2013

இளம் விஞ்ஞானி ராஜேஷ்

 இளம் விஞ்ஞானி  ராஜேஷ் 
 
திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.

இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது.

மேலும் "யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் சோலார் பைக்கை சோதனை செய்து ஆராய்சிக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜேஷின் எதிர்கால லட்சியம் இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து நிறையக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவிற்கு சேவை செய்வதுதானம்.

இவரின் கண்டுபிடிப்பைப் பகிர்ந்து, அவரை ஊக்கப்படுத்துவோம்..

Tuesday, August 20, 2013

POST BOX - ல் போட்டு விடவும்

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,

~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,


~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

திராட்சை பழம் பயன்கள் Benefits of grapes

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம்! ! ! ! 


அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச்சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத்தடுக்கும்.

Tuesday, August 13, 2013

Puththisalithanam புத்திசாலித்தனம்

தகவல் புத்தகம்:
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

Friday, August 9, 2013

அதிக தோல்விகள்

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள்
அதிகம்..?
01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில்
தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும்
தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில்
வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.

இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர்
வேறுயாருமில்லை...
உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க
அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.

அதிக
தோல்விகள், அதிக பாடங்கள்,
இவையே வெற்றியின் இரகசியம்...!

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில்
சொந்தம்’
சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில்
விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக்
குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக்
கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர்
பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம்
வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும்
இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய்,
பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.
கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,
''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான்
சாப்பிடுகிறோம். அதற்காக
அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம்,
தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம்
கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான்
குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக்
கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா?
அவரும் அசராமல் திருப்பி அடித்தார்.
''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம்
(அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
பொருள்) அல்ல. அதனால் தட்டு,
டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது.
ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம்.
இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள்
விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும்
சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது.
குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும்
சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம்.
எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில்
சொந்தம்.
மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப்
வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள்
பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''
என்று வாதிட்டார்.
ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த
வழக்கில்,
'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில்
சொந்தம்’ என்று தீர்ப்பானது.

Wednesday, August 7, 2013

தினசரி செல்போன் பேசுவோருக்கு புற்று நோய் அபாயம்

தினசரி செல்போன் பேசுவோருக்கு புற்று நோய் அபாயம்: ஆய்வில் தகவல்!

தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நண்மைகள்

தமிழ் - Tamil:
உடலில் 80 சதவீதம் #தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும். உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் #மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் #நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் #தொடருங்கள்.

1 உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு #ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும். எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

2 அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் #மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் #கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

3 உடலின் #வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்.

4 உடலில் #மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.

5 80 சதவீத #தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்.

6 நிறைய பேர் #மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.

7 முகத்தில் #முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

8 பொதுவாக வயிறானது உணவுகளை #செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்

9 #மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.

10 உடலிலேயே #மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

11  உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

12 தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

#தமிழ் #தமிழர் #Tamil

உலகின் முக்கிய தினங்கள் - ஆகஸ்ட்..!!

உலகின் முக்கிய தினங்கள் - ஆகஸ்ட்..!!

ஆகஸ்ட் 1 உலக தாய்ப் பால் தினம்.

ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்

ஆகஸ்ட் 6 நண்பர்கள் தினம்.

ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினம்

ஆகஸ்ட் 9 நாகசாகி தினம்.

ஆகஸ்ட் 13 புகை எதிப்பு தினம்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்.

ஆகஸ்ட் 18 நேதாஜி நினைவு தினம்.

ஆகஸ்ட் 25 முதல் 8 வரை கண்தானம் தினம்

ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம்.

ஆகஸ்ட் 30 ரக்ஷா பந்தன் விழா.

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் மாற்றம் செய்திடுங்கள்

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

http://uidai.gov.in/update-your-aadhaar-
data.html

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார்
கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,
மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த
மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய
முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும்
குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட்
செய்யலாம்.

அல்லது அந்த குறிப்புகளை தபால்
மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன்
மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய
குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட்
செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய
வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக
மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும்
போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல்
எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர்,
முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும்
மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த
வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய

தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த
வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள்
மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது,
அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல்
எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின்
உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய
வேண்டும். உடனே உங்கள் மொபைல்
எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி)
அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப்
பதிவு செய்யவில்லை என்றால், அந்த
வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப்
பதிவு செய்யவும். தற்போது மொபைல்
எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும்.
ஒருவேளை மொபைல் எண்ணைத்
தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத்
தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில்
பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட்
செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம்
மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு
தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க
வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிர
ுந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட்
செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர்
மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான
உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம்
ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும்
போது அதற்கான உறுதிச் சான்றிதழையும்
அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய
முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட்
செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச்
சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய
முடியவில்லை என்றால் தபால் மூலம்
அனுப்பி வைக்கலாம்.