Monday, November 4, 2013

கடல் மற்றும் தரையில் ஓடும் நவீன கார் மூலம் 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து உலகை சுற்றும் முயற்சி துவக்கம் Estonia man to trip world through Amphibian car

கடல் மற்றும் தரையில் ஓடும் நவீன கார் மூலம் 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து உலகை சுற்றும் முயற்சி துவக்கம் Estonia man to trip world through Amphibian car

லண்டன், நவ.4-

எதிரிகள் காரில் விரட்டிக்கொண்டு வரும்போது விர் என்று ஆற்றுக்குள் பாய்ந்து காரை படகாக்கி ஜேம்ஸ் பாண்ட் செய்யும் சாகசங்களை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம்.

இந்த காட்சிகளை நிஜமாக்கும் நவீன காரை டொயோட்டா நிறுவனம் லேண்ட் க்ரூசியர் என்ற பெயரில் தயாரித்துள்ளது.

வட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவை சேர்ந்த மெய்ட் நிப்சன்(44) என்பவர் இந்த காரின் மூலம் கடல் மற்றும் தரை வழியாக 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து 9 மாதங்களில் உலகை சுற்றிவரும் சாகச பயணத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினார்.

4 x 4 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கார், நீரில் பயணிக்கும் போது 10 மீட்டர் உபஇணைப்பு கொண்ட படகாக மாறிவிடும். இதற்காக சுமார் 200 மணி நேரம் கடலில் ஒத்திகை பயணத்தை நடத்தியுள்ள மெய்ட் நில்சன் நேற்று முன்தினம் டெய்லின் இருந்து தனது சாகச பயணத்தை தொடங்கினார்.

எஸ்டோனியா, லட்வியா, விதுவேனியா, போலாந்து, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மொராக்கோ, மவுரிடானியா, செனெகல், வெட்டே வளைகுடா, பிரேசில், அர்ஜெண்டினா, சிலி, பெரு, கொலம்பியா, பனாமா, நிகாராகுவா, ஹொன்டுராஸ், கவுடெமாலா, மெக்சிக்கோ, அமெரிக்க, கனடா மற்றும் ரஷ்யா வரியாக 60 ஆயிரம் கி.மீட்டர் தரை வழியாகவும், கடல் மற்றும் ஆறுகள் மார்க்கமாக சுமார் 9 மாதங்கள் பயணித்து மீண்டும் அவர் எஸ்டோனியா வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

தயார் நிலையில் மங்கள்யான்: திட்டமிட்டபடி நாளை ஏவப்படும் mangalyaan ready position tomorrow will launch as planned

தயார் நிலையில் மங்கள்யான்: திட்டமிட்டபடி நாளை ஏவப்படும் mangalyaan ready position tomorrow will launch as planned

சென்னை, நவ. 4–

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் எனும் விண்கலத்தை தயாரித்துள்ளது.

இந்த விண்கலம் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

மங்கள்யானை தயார் படுத்துவதற்கான 56½ மணி நேர கவுண்ட் டவுன் நேற்று அதிகாலை 6.08 மணிக்கு தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மங்கள்யானில் இன்று இறுதிகட்ட இணைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

மங்கள்யானை சுமந்து செல்லும் 45 மீட்டர் நீளமுள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த ராக்கெட் 76 மீட்டர் நீளமுள்ள நகரும் கோபுரம் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவு தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று அந்த நகரும் கோபுரம் ராக்கெட்டை ஏவுதளத்தில் நிலை நிறுத்தும். இதன் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முழு அளவில் தயார் நிலையில் உள்ளது.

நாளை மதியம் 2.38 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பறந்ததும், அது அடுத்த 40-வது நிமிடத்தில் மங்கள்யானை பூமி சுற்றுப் பாதையில் கொண்டு போய்விடும். தென் அமெரிக்காவுக்கு மேல் உள்ள சுற்றுப்பாதையில் மங்கள்யான் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 முதல் 25 நாட்களுக்கு மங்கள்யான் பூமியை சுற்றி வரும். டிசம்பர் 1–ந் தேதி மங்கள்யான் செவ்வாய் நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கும். 9 மாதங்கள் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ந்தேதி அது செவ்வாய் கிரகம் அருகில் சென்று அடையும்.

மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டப்படி செவ்வாயை ஆய்வு செய்தால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா எட்டிப்பிடிக்கும். இதுவரை ஐரோப்பிய விண்வெளி கழகம், அமெரிக்காவின் நாசா, ரஷியா ஆகியவையே செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 51 விண்கலங்கள் ஏவப்பட்டன. அதில் 21 விண்கலங்கள்தான் வெற்றி பெற்றன.

இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்த பல்வேறு நாடுகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆலந்து நாட்டு நிறுவனம் ஒன்று இன்னும் 10 ஆண்டுகளில் காலனி ஒன்றை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.

அதில் குடியேற உலகின் பல நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் செவ்வாயில் குடியேற விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.

...

shared via

Thursday, October 31, 2013

லிம்கா சாதனையில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ limca world record movie

லிம்கா சாதனையில் 'என்ன சத்தம் இந்த நேரம்'

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளைப் பற்றிய படமான 'என்ன சத்தம் இந்த நேரம்' படம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்த நிதின் சத்யா சின்ன இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாகும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

ஹைதராபாத் மற்றும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஏவி புரொடக்‌ஷன் சார்பில் ஏவி அனூப் தயாரிக்க இப்படத்தை குரு ரமேஷ் இயக்கியுள்ளார்.

உயிரியல் பூங்காவுக்கு வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போகிறார்கள். பூங்கா பாதுகாவலரான நிதின் சத்யா ஒரேநாளில் அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் கதை.

இந்தப் படத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் முன்னணி இயக்குனர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

ஒரு படத்தில் ஒரே நேரத்தில் பிறந்த நான்கு சகோதரர்கள் நடிப்பதும் இதுதான் முதல்முறையாம். இதனால் இப்படத்தினை லிம்கா சாதனைக்கு விண்ணப்பித்தார்கள்.

படப்பிடிப்பு இடத்திற்கு சென்று ஆய்வு செய்த லிம்கா குழுவினர், லிம்கா சாதனைப் புத்தகத்தில் படத்தை இடம் பெற சம்மதித்தனர்.

அதன்படி இன்று படக்குழுவினரைச் சந்தித்து அதற்கான சான்றிதழை அளிக்க இருக்கிறார்கள்.

shared via

Tuesday, October 29, 2013

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம் agadam movie

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம்

கின்னஸ் உலக சாதனைத் திரைப்படம் 'அகடம்' அடுத்த மாதம் நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்திய சினிமா நூற்றாண்டு காணும் இந்த வேளையில் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'அகடம்'.

எண்ணற்ற உலக சினிமா விரும்பிகளின் கவனத்தைத் திருப்பிய இப்படம் வெளியாவதில் அகடம் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

அகடம் முழு திரைப்படமும் தொடர்ந்து 2 மணிநேரம் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் எவ்வித கட், ரீடேக் எதுவும் இல்லாமல் படமாக்கப்பட்டதுதான்.

சமூக சிந்தனையுள்ள இப்படம் முழுவதும் ஒரே இடத்தில் திகிலூட்டும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகளால் யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

சமீபத்தில், இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் 'அசிஸ்ட் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் அதன் ஆண்டுவிழாவில் அகடம் படக்குழுவினரை சாதனைச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தியது.

'கின்னஸ் உலக சாதனை' நிறுவனம் ஏற்கனவே இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனைப்படத்தை கன்னடம் மற்றும் இந்தி பட உலகிற்கும் கொண்டுசெல்லும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

திரைப்படத்திற்கும், நாடகத்திற்கும் சில இலக்கணங்கள் உண்டு, ஒரே சாட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டால் அது நாடகமாகவே அமையுமே அல்லாமல் திரைப்படமாக அமையாது என்பது கவனிக்கத்தக்கது.

shared via

Sunday, October 27, 2013

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

இஸ்தான்புல், அக். 28-

2.51 மீட்டர் (8 1/4 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளவர் சுல்தான் கோசென். துருக்கி நாட்டில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் பருவத்தே பயிர் செய்ய விரும்பி தகுந்த பெண்ணை தேடி வந்தார்.

ஆனால், இவரது உயரத்தை கண்டு மிரண்ட பல பெண்கள் இவருக்கு கழுத்தை நீட்ட மறுத்து விட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய், இனி காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்த சுல்தான் கோசென், தற்போது தனது 30வது வயதில் மெர்வோ டிபோ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பிலேயே, கண்ணும் கண்ணும் ஒட்டிக்கிச்சு.. காதல் வந்து பத்திக்கிச்சு என்ற உணர்வு மெர்வோ டிபோவை வாட்டி வதைக்க சுல்தான் கோசென்-னை திருமணம் செய்துக் கொள்ள அவர் சம்மதித்துள்ளார். பொறுத்தது போதும் - பொங்கி எழு என்ற ரீதியில் சுல்தான் கோசென் அவசர கதியில் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தன்னை விட 2 1/2 அடி (30 அங்குலம்) உயரம் குறைவான காதலியை மணம் முடிக்கும் விழாவுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்களையும் இவர் அழைத்துள்ளார்.

திருமண உடைகள் உள்ளிட்ட எல்லா வேலையையும் முடித்து விட்ட சுல்தான் கோசென் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர்வலம் போக உயரமான காரை தேடிக் கொண்டிருக்கிறார்.

...

shared via

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

துபாய், அக். 28-

பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன் மாதத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து மட்டுமே கையாளப்பட்டு வந்தது.

இங்கிருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 5 3/4 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத அல் மக்தூம் விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது.

பணிகள் நிறைவடைந்த பின்னர் 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 16 கோடி பயணிகளையும் 1.2 கோடி டன் சரக்குகளையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

...

shared via

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

புதுடெல்லி, அக். 27-

உலகின் மிக பிரபலமான கார் பந்தயம் பார்முலா 1 கார் பந்தயமாகும். 19 சுற்றுகலாக நடத்தப்படும் இப்போட்டியின் 16-வது சுற்றான இந்தியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம் இன்று டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்தது.

2011-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இரண்டு போட்டிகளிலும் செபஸ்டியன் வெட்டலே வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் இன்று நடந்த இப்போட்டியிலும் ரெட் புல் அணி சார்பக கலந்துகொண்ட ஜெர்மனியின் இளம் வீரர் செபாஸ்தியன் வெட்டல் அதிக புள்ளிகள் பெற்று இந்தியன் கிராண்ட் பிரீ சாம்பியன்ஸ் கோப்பையை
தொடர்ந்து மூன்றாவது முறையாக தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் ஹாட்ரிக்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தை மெர்சிடிஸ் அணியை சேர்ந்த ரோஸ்பெர்க்கும், மூன்றாவது இடத்தை லோடஸ் அணியை சேர்ந்த குரோஸ்ஜீனும் பெற்றனர்.

தொடர்ந்து 4 உலக சாம்பியன் கோப்பைகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இச்சாதனையை ஜுவான் மேனுவல் பேங்கியோவும், மைக்கேல் சூமேக்கரும் செய்துள்ளனர்.

...

shared via

Thursday, October 24, 2013

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி, அக். 25-

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்.

அரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த இவர் பிளஸ்-2 தேர்வில் 940 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றர். இவருக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படிப்பில் இடம் கிடைத்தது. இந்த கல்லூரியில் சேர்ந்த அவர் தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இதுதொடர்பாக மாணவி கல்கி கூறியதாவது:- நான் சிறுமியாக இருந்த போது எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்வதே மிகவும் அரிது. இருந்தபோதிலும் பிற சிறுவர் - சிறுமிகளை போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என நான் அடம் பிடித்ததால் என்னை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.

பல்வேறு தடைகளை சந்தித்த போதும் அவற்றை சமாளித்து நன்றாக படித்த எனக்கு இப்போது அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தபின்னரும் கல்லூரி மாணவ - மாணவிகள் என்னிடம் சகஜமாக பழகுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடையே கல்வி தொடர்பான விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம். நான் பட்டப்படிப்பை முடித்த பின்னர் வக்கீலுக்கு படிக்க விரும்புகிறேன் .

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Friday, October 18, 2013

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்! Cancer

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன என்று தெரிய வந்தது.

இதற்கிடையில் புற்று நோய் வகைகளை நாம் அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.

நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.

இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.

இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.

உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.

புற்றுநோய்க்கான புற காரணிகள்:-

காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.

இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.

ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.

உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.

இதற்கிடையில் நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதும இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகி விட்டது. அதாவது நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.

அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.

தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.

காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.

தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவித்யா

aanthaireporter

shared via

Thursday, October 10, 2013

இன்று உலக கண்பார்வை தினம் world sight day

இன்று உலக கண்பார்வை தினம்:கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள்

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday

இலங்கையில் 1,50,000 பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுவதுடன், பாடசாலை மாணவர்களில் 4,50,000 பேர் பார்வை குறைந்தவர்களாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.இன்று உலக கண்பார்வை தினமாகும். உங்கள் கண்களை பரீட்சித்துக்கொள்ளுங்கள் என்ற தொனியில் இம்முறை பார்வை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் 6250 மில்லியன் சனத்தொகையில் 39 மில்லியன் பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைப்போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
கண் வெண்படலம், நீரிழிவு போன்றவற்றால் ஏற்படும் கண்நோய்கள், க்ளோகோமா போன்ற நோயினாலும் கண்கள் பார்வை இழந்து போவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஆரம்பத்திலேயே நோய்களை இனங் கண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுத்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

சர்வதேச செயற்திட்டமான விஷன் 2020 திட்டம் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க நாடுமுழுவதிலும் கண் பார்வை, கண்நோய்கள் தொடர்பான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.இலங்கையில் 1,50,000 பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களில் 4 இலட்சத்து 50,000 பேர் கண்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50,000 மாணவர்கள் பார்வை குறைந்த நிலையில் உள்ளனர்.

உலக பார்வை தினமான இன்றைய தினத்தில் கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளன. அத்துடன் கண்நோய் பரீட்சிப்பு தொடர்பான விசேடபிரிவும் கண் இரசாயன கூடமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்படவுள்ளன.

The post இன்று உலக கண்பார்வை தினம்:கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

How to prevent Diabetes - சர்க்கரை நோய்

How to prevent Diabetes - சர்க்கரை நோய்

வருமுன் காப்பது எப்பட
by sumathisrini
New Tamil

இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி இல்லாததால் சர்க்கரை நோய் வருவது தவிர்க்க முயாததாகி விட்டது. சர்க்கரை நோய் என்பது ஒரு குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும்போதே மரபணுவின் மூலமாக தோன்றுகிறது.

அது 20 அல்லது 30 வயதில் சுற்றுப்புற சூழ்நிலை காரணங்களால் தூண்டப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறது. சுற்றுப்புற சூழ்நிலை என்பது மனிதன் நினைத்தால் மாற்றிக் கொள்ள கூடிய ஒன்று ஆகும். சுற்றுப்புறச் சூழ்நிலையை வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை தவிர்க்கலாம் அல்லது தள்ளி போடலாம். மனிதனின் தோற்றத்துக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் எப்படி ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டோ அதுபோல் சர்க்கரை நோய்க்கும் வரலாறு உண்டு.

எகிப்து பிரமிடுகள் மூலம் அழியா புகழ் பெற்றுள்ள எகிப்தியரின் குறிப்புகளில் சர்க்கரை நோய் பற்றி கி.மு.1500ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சஸ்ருத் என்ற மருத்துவ மேதை சர்க்கரை நோயை மதுமேகம் என தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நோய், சோம்பேறிகளுக்கும் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் அதிகமாக உண்பவர்களுக்கும் இனிப்பு, கொழுப்பு உள்ளவர்களுக்கும் அதிகம் வருகிறது என அதில் கூறியுள்ளார்.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

நமக்கு சக்தியை தருவது குளுக்கோஸ் என்கிற சர்க்கரை சத்து. எந்த உணவு சாப்பிட்டாலும் குளுக்கோஸ் இயக்க சக்தியாக மாற்றி ரத்தத்தின் வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்து பயன்படுத்தி கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை. இதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர்(ஹார்மோன்) தேவைப்படுகிறது.

அதாவது இன்சுலின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச் சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள் ஆகும். இன்சுலின் உற்பத்தி உடலில் சீராக நடைபெறும்போது எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

ரத்தத்தில் சர்க்கரை அளவும் 80-120 மில்லி கிராம் அளவுக்குள் இருக்கிறது. ஆனால் இன்சுலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும்போது உடல் உறுப்புகளின் செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளாமல் உடல் இயக்கத்துக்கு போதிய சக்தி கிடைக்காமல் போகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை கூடுகிறது. ரத்த தில் ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை தாண்டும்போது கூடுதல் சர்க்கரையை வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தடுக்கிறேன் என்று சிறுநீரகம், உடல் தேவைக்கு அதிகமாகவே சிறுநீர் மூலம் சர்க்கரையை வெளியேற்றுகிறது. இந்த நிலை நீடிக்கும்போது உடலில் பல செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதனால் தான் சர்க்கரை நோயாளிக்கு களைப்பும், அசதியும் அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதால் நீர் இழப்பு என்பது நீரழிவு நோய் ஆயிற்று.


Show commentsOpen link

Tuesday, October 8, 2013

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

by tnkesaven

தமிழகம் ஆங்கிலேயர்களாலும் பிரஞ்சுக்காரர்களாலும் பங்கு போடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு சுதேசி மன்னர்களும் இவ்விருவர் அணியிலும் பிரிந்து நின்ற அவலம்.
திப்பு சுல்தான் பிரஞ்சுக்காரர்களுக்காக சிதம்பரம் நகரை முற்றுகையிட்டான். அந்நியர் படையெடுப்பு எப்பொழுதுமே ஆலயங்களைக் குறிவைத்தே நடத்தப்படுவதால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலிருந்த ஆடல் வல்லானின் ஐம்பொன் சிலை பாதுகாப்பு பெரிய விஷயமாகப்பட்டது.
கோயிலில் பணிபுரிந்த "வைப்பி' என்னும் தேவதாசி தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாய் ஆறுதல் கூறி கோயிலாரின் அனுமதி பெற்று, நடராஜர் விக்கிரகத்தை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றாள். தன் குடியிருப்பை ஒட்டிய புளியந்தோப்பிலுள்ள ஒரு புளியமரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்து பொந்தை முட்செடிகளால் மூடி வைத்தாள். பின்னர் அதன் வாயிலில் பசிய தழைகளைச் சார்த்தி, இலை மீது மஞ்சள் விழுது பூசி மறைத்தாள்.
தினசரி இம்மரத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வழிபாட்டை எவரும் சந்தேகிக்கவில்லை. சில மாதங்களில் வைப்பி இறந்து போனாள்.
படையெடுப்பு முடிந்து திப்பு சுல்தான் சிதம்பரத்தை விட்டுத் திரும்பிச் சென்றதும் கோயில் நிர்வாகிகள் வைப்பியைத் தேடினர். அவள் இறந்துபோனதை அறிந்து திகைத்தனர். ஆனால் அவள் தினம் ஒரு புளியமரத்திற்குப் பூசை செய்த விவரத்தை அங்கிருந்தோர் கூற கோயிலார் அந்த மரத்தை ஆராய்ந்தனர்.
நடராஜர் சிலை இருக்குமிடம் தெரிந்தது. வைப்பியின் தியாகத்தையும் கடமையுணர்ச்சியையும் புகழ்ந்து கோயிலார் நடராஜரை மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர்.
அன்றிலிருந்து வைப்பி வாழ்ந்த இடம் "வைப்பி சாவடி' என்றும் அந்தப் புளியமரம் "அம்பலப்புளி' என்றும் அழைக்கப்பட்டன. இந்தத் தகவலை டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.

courtesy;''வரலாற்றில் தேவதாசிகள்'-'சி.எஸ்.முருகேசன்.'

Show commentsOpen link

Monday, October 7, 2013

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் valcanoes on mars

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள்

by தமிழ் உலகம்

செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
 அதாவது Supervolcanoes எனப்படும் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக
விஞ்ஞானிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 
 மேலும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு செவ்வாயில் இடம்பெற்றிருக்கலாம் என நம்புவதாக Michalski எனும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.




Show commentsOpen link

Sunday, October 6, 2013

யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி... how to download youtube videos

யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி...

by Marikumar
டிப்ஸ்Yesterday,

யு ட்யூப் தளத்தில் வீடியோ படங்களை டவுண்லோட் செய்திடச் செல்கையில், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்களால் பிரச்னை ஏற்படுகிறது. தர்ட் பார்ட்டி புரோகிராம் இல்லாமல், யு ட்யூப் தளத்தில் இருந்தவாறே தரவிறக்கம் செய்திட முதலில் நீங்கள் தரவிறக்கம் செய்திடும் யு ட்யூப் வீடியோ உள்ள பக்கத்தைத் திறக்கவும்.

பின்னர் அதன் முகவரியைக் கவனிக்கவும். அதில் www.youtube.com/watch ?v=xxxxxxx என இருக்கும்.

இனி, youtube என்பதன் முன்னால் ssஎனச் சேர்க்கவும்.

முகவரியில் youtube என்பது ssyoutube என மாறி இருக்கும். இப்போது என்டர் பட்டனை அழுத்தவும்.

இப்போது புதியதாக http://en.savefrom.net/ என்ற முகவரியில் உள்ள தளம் திறக்கப்படும்.

இதில் நீங்கள் விரும்பும் வீடியோ பைல் எந்த பார்மட்டில் பதியப்பட வேண்டும் என்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப் பட்டிருக்கும்.

உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்திட கட்டளை கொடுத்தால், உடன் வீடியோ பைல் பதிவு செய்யப்படும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் அடிப்படையில், பதியும் நேரம் வேறுபடலாம்.

இந்த இடத்தில் யு ட்யூப் தளத்தில் இருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட உதவும், ஆன்லைன் தளங்களின் பெயர்களையும் தருகிறேன்.

விருப்பப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே.

அவை

http://www.keepvid.com
http://www.videodownloadx.com
http://www.vdownloader.es
http://boomvid.com
http://www.zilltube.com
http://www.tubeg.com

மேலே சொல்லியவாறு, நீங்கள் டவுண்லோட் செய்ய வேண்டிய வீடீயோ பைல் உள்ள யு-ட்யூப் தளப் பக்கம் செல்லவும். அதன் யு.ஆர்.எல், முகவரியை காப்பி செய்து கொண்டு, பின் மேலே குறிப்பிட்டுள்ள தளங்களில் ஒன்றுக்குச் சென்று, அங்கு தரப்பட்டுள்ள கட்டத்தில், முகவரியை பேஸ்ட் செய்திடவும்.

அடுத்து, உங்கள் வீடியோ பைலை நீங்கள் எந்த பார்மட்டில் பெற விரும்புகிறீர்கள் என்ற ஆப்ஷனைத் தேர்வுச் செய்து எண்டர் தட்டவும். நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி அல்லது போல்டரில், வீடியோ பைல் டவுண்லோட் ஆகும்.
Share |

Show commentsOpen link

Saturday, October 5, 2013

உலகின் டாப் 10 வெப்சைட்ஸ்!!! Top ten websites

உலகின் டாப் 10 வெப்சைட்ஸ்!!!

by Marikumar

இனி வரும் தலைமுறையினர் இணையம் இல்லாமல் இருக்க போவதில்லை எனலாம் ஏன் நாமே ஒரு நாள் இணையத்தை பயன்படுத்தாவிட்டால் அவ்வளவுதான்.

மேலும், நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் இணையத்தின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது எனலாம் இன்று இணையம் இல்லாத உலகே இல்லை என்றே கூறலாம்.

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது என்று கேட்டால் கண்களை மூடிக் கொண்டு கூகுள் என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை.

அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில் யார் என்று கேட்பீர்கள் நிச்சயம் அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான்.

இங்கே இந்த வகையில் அதிக யூஸர் அக்கவுண்ட்களை கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் சிறப்புகளையும் காணலாம் இப்பொழுது பாருங்கள் யார் முதலிடம் என்று....

பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது.

கூகுள் 78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டது இந்த தேடுதல் தளம்

யூடியுப் 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

யாஹூ இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

விக்கிபிடியா 46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது.

லைவ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

கியூகியூ(QQ)இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் இதில் உள்ளனர்.

மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

பைய்டு (Baidu) வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

எம்.எஸ்.என் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.
Thatstamil
Share |

Show commentsOpen link

Friday, October 4, 2013

சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி 24 hours medical numbers

சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...
தெரிந்து கொள்வோம .

சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி எண் மற்றும் முகவரி.

அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்….

அப்பல்லோ பார்மஸி
449, திருவொற்றியூர் ஹைரோடு,
வண்ணாரப்பேட்டை.
போன்: 044-42078585.

அன்னை பார்மஸி
3, சரஸ்வதி நகர், முதல் மெயின் தெரு,
திருவொற்றியூர்.
போன்: 044-25740521.

அப்பல்லோ பார்மஸி
645, திருவொற்றியூர் ஹைரோடு,
தண்டையார்பேட்டை.
போன்: 044-25913333.

அம்ருதா பார்மஸி
12, ஜாபர் ஷெரங் தெரு,
பாரிமுனை.
போன்: 044-25240131.

அப்பல்லோ பார்மஸி
445, மின்ட் தெரு,
சவுகார்பேட்டை.
போன்: 044&25295999.

அப்பல்லோ பார்மஸி
74, என்எஸ்சி போஸ் ரோடு,
சவுகார்பேட்டை.
போன்: 044-25330832.

ஸ்ரேயா மெடிக்கல்ஸ்
924, எல்லையம்மன் கோயில் தெரு,
டிஎச் ரோடு, திருவொற்றியூர்.
போன்: 044-25995234.

பாவா மெடிக்கல்ஸ்
2, 38வது தெரு,
கொளத்தூர் மெயின் ரோடு,
ஜிகேஎம் காலனி.
போன்: 044-66424804.

ஆனந்த் ஹாஸ்பிடல்
201, காமராஜர் சாலை,
மணலி.
போன்: 044-25942900.

ஆர்.எஸ்.மெடிக்கல்ஸ்
6, எம்ஆர் நகர்,
தண்டையார்பேட்டை ஹைரோடு,
கொடுங்கையூர்.
போன்: 044-25581865.

அபிராமி மெடிக்கல்ஸ்
9/2, எஸ்ஆர்பி கோயில் தெரு,
பெரியார் நகர்.
போன்: 044-26703888.

ஈஸ்வர் மெடிக்கல் பவுண்டேஷன்
1, பாரதி நகர், ரெட்ஹில்ஸ் ரோடு,
கொளத்தூர்.
போன்: 044-26710351.

தகவல் – தினகரன்

The post சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Excel Functions..எக்ஸெல் பங்சன்கள்

Excel Functions..எக்ஸெல் பங்சன்கள்

by silentsounds
New
Excel Functions-எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப்படுகின்றன. இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப்படும்.

2. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =AVERAGE(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப்பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =MAX(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

இதனை அமைக்கும் விதம் =COUNT(A1:A4)

5. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =Min (A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

6. Round: செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும்.

இதனை அமைத்திடும் விதம் =ROUND(A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும்.

மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப்படும் செல்களின் எண்களைத் தரலாம்.

Show commentsOpen link

Thursday, October 3, 2013

Pineapple : A wonderful Fruit

Pineapple : A wonderful Fruit

by krushrikrish
New Tamil

Pineapple has Bromelain, a proteolytic enzyme. Proteolytic means "breaks down protein",

The pineapple is a member of the bromeliad family.

It is extremely rare that bromeliads produce edible fruit. The pineapple is the only available edible bromeliad today.

It is a multiple fruit. One pineapple is actually made up of dozens of individual floweret's that grow together to form the entire fruit. Each scale on a pineapple is evidence of a separate flower.

Pineapples stop ripening the minute they are picked. No special way of storing them will help ripen them further.
Colour is relatively unimportant in determining ripeness. Choose your pineapple by smell.If it smells fresh, tropical and sweet, it will be a good fruit.

The more scales on the pineapple, the sweeter and juicier the taste.

The juice has an anthelmintic effect; it helps get rid of intestinal worms.

Pineapple is high in manganese, a mineral that is critical to development of strong bones and connective tissue. A cup of fresh pineapple will give you nearly 75% of the recommended daily amount.

Proteolytic means "breaks down protein", which is why pineapple is known to be a digestive aid. It helps the body digest proteins more efficiently.

Bromelain is also considered an effective anti-inflammatory.

Regular ingestion of at least one half cup of fresh pineapple daily is purported to relieve painful joints common to osteoarthritis.

Fresh pineapple is not only high in this vitamin, it has the ability to reduce mucous in the throat.

If you have a cold with a productive cough, add pineapple to your diet.

Pineapple is also known to discourage blood clot development. This makes it a valuable dietary addition for frequent fliers and others who may be at risk for blood clots.

It's also good for a healthier mouth. The fresh juice discourages plaque growth.

Show commentsOpen link

Wednesday, October 2, 2013

பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு 405 feet towering temple to be built in Bihar

பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு 405 feet towering temple to be built in Bihar

Tamil NewsYesterday, 05:30

பாட்னா, அக்.3-

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:-

இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் 215 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலை உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

பீகாரில் கட்டப்பட உள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என தெரிகிறது.

(படத்தில் காணப்படுவது கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஆகும்)
...
Show commentsOpen link

Tuesday, October 1, 2013

அடிக்கடி தலைவலி வருகிறதா – நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கலாமே ! Head ache solution

அடிக்கடி தலைவலி வருகிறதா – நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கலாமே !!
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...
 

1. கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

நல்லெண்ணெய்              கற்பூரவல்லி இலை               சர்க்கரை
தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 

2. மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

மகிழம்பூ                             சோம்பு                                ரோஜாபூ
தேவையான பொருட்கள்:

மகிழம்பூ
சுக்கு.
சீரகம்.
சோம்பு.
ரோஜாப்பூ.
ஏலக்காய்.
அதிமதுரம்.
சித்தரத்தை
தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

The post அடிக்கடி தலைவலி வருகிறதா – நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கலாமே !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Sunday, September 29, 2013

கூகுள் மாயக் கண்ணாடி google majic mirror

கூகுள் மாயக் கண்ணாடி

by tnkesaven

பூவே பூச்சூடவா படத்தில் நதியா அணிந்து வந்த கண்ணாடி பற்றி ஞாபகம் இருக்கிறதா?

"இந்தக் கண்ணாடி வழியே பார்த்தால், ஆடையில்லாமல் தெரியும்," என்று நதியா அடித்துவிட,
அவரைப் பார்த்தாலே எஸ்.வி.சேகர் ஓடி ஒளிவார்.
அது போன்ற அபூர்வக் கண்ணாடி, "கூகுள் ஆண்டவ"ரின் புதிய அறிமுகம்.
அது ஒரு மூக்குக் கண்ணாடி.
புளூடூத் கருவியைவிட, கொஞ்சம் பெரியது இந்த கூகுள் கிளாஸ்.

இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டால், இனிமேல் ஒவ்வொரு விஷயத்துக்கும் "கூகுள் கூகுள் பண்ணிப் பார்க்க" வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில், சும்மா ஒரு கண்ணசைவே போதும். கேட்டது கையில் கிடைக்கும், அதுதான் கூகுள் கிளாஸ்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.

இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது.

5 மெகாபிக்ஸல் கொண்ட கேமெரா, வீடியோ பதிவுக் கருவிகள், வைஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கூகுள் கிளாஸுக்கு "ஜே" போட வைக்கின்றன.

இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, "ஒகே. கிளாஸ்" என்று சொன்னால் போதும், உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும்.

இதைக்கொண்டு பாட்டு கேட்கலாம், திசையறியலாம், வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம்,

திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம்.

ந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன.

"டேக் எ பிக்சர்" என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். ஏன் நீங்கள் பார் நண்பர்க்கும் காட்சியை, உங்கள்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.

இந்தக் கண்ணாடியின் தனித்துவம், இது சிறப்பான குரல் அடையாளம் காணும் வசதியைக் கொண்டுள்ளதுதான்.

இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும். ஒரே விஷயம்

வலைத்தளங்களை பார்க்க முடியாது.

அதற்கு ஈடாக, இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிப்பதற்கு ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி தேவை.

இந்த கூகுள் கிளாஸில் சில பிரச்சினைகளும் உணடு.

நம் கண்களுக்கு ஒரு செ.மீ. முன்னால் குறுஞ்செய்தி ஒளிர்ந்தால், முதலில் பார்ப்பதற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது சீக்கிரமே பழகிவிடும் என்கிறார்கள்.

சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன்படுத்தலாமாம்.

குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை.

தொலைபேசிக் கருவியை கையில் எடுக்க வேண்டியதும் இல்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனம் சிதறலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதனால் மனப்பதிவு, மனித மூளைச் செயல்பாடு போன்ற பல விஷயங்களுக்கு மதிப்பு குறைந்து போகும்

அடுத்தவரின் அந்தரங்கத்துக்குள் தலையிடும் என்ற அச்சமும், சமூக இழுக்காக கருதப்படலாம் என்ற எதிர்மறைத்தன்மையும் மையக்கூடும்.
. இப்போதைக்குப் போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கூகுளின் Glass Project Explorer Kit வழங்கப்படுகிறது. .
இதன் தற்போதைய மதிப்பு ரூ. ஒரு லட்சம்.

courtesy;''the indhu

Show commentsOpen link

முதல் 20 இணைய தளங்கள்..!! World top 20 websites

முதல் 20 இணைய தளங்கள்..!!
by veni
ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday, 12:57

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா?

அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.

1. Facebook.com:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

2. Google.com:

78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

3. Youtube.com:
பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

4. Yahoo.com:
இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

5. Wikipedia.org:
46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.

6. Live.com:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

7. QQ,com:
சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
8. Micorosoft.com:
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

9. Baidu.com:
வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

10. MSN.com:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.
11. Blogger.com:
மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.

12. Ask.com:
21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது.

13.Taobao.com:
20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது.

14. Twitter.com:
ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம்.

15. Bing.com:
மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.

16. Sohu.com :
சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
17. Apple.com:
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம்.
18. WordPress.com:
17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.

19. Sina.com.cn:
மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.
20.Amazon.com:
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

The post முதல் 20 இணைய தளங்கள்..!! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Saturday, September 28, 2013

பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...tamil house maintanence tips

பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...

by Marikumar

வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும். இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும்.

இப்படி வீட்டின் சுவர்களில் இருந்து அச்சமூட்டும் பல்லியை விரட்டுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அதனைப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் சிறந்தது என்பதைப் புரிந்து, அந்த வழியிலேயே பல்லியை விரட்ட வேண்டும். மேலும் பல்லியை விரட்ட பல அருமையான பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அத்தகைய பொருட்களைக் கொண்டு விரட்டினால், நிச்சயம் பல்லியை விரட்டிவிடலாம். இப்போது அத்தகைய பல்லியை விரட்டுவதற்கு பயன்படும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

காபித் தூளை புகையிலை பொடியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறு உருண்டைகளாக்கி, அதனை பல்லி அதிகம் வரும் இடத்தில் வைத்தால், அதனை பல்லி சாப்பிட்டால், பல்லி இறந்துவிடும்.

பாச்சா உருண்டை பூச்சிகள் வருவதைத் தடுக்கும் ஒரு சிறப்பான பொருள். இந்த பொருளை உடை அலமாரி, தண்ணீர் தொட்டி அல்லது அடுப்பிற்கு அடியில் வைத்தால், அது பல்லியை விரட்டிவிடும்.

பல்லிகளுக்கு மயில் இறகு என்றால் பயம். எனவே மயில் இறகை சுவற்றில் ஒட்டினால், அது பல்லி வருவதைத் தடுத்துவிடும்.

பெப்பரை நீரில் கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி வரும் இடங்களில் தெளித்தால், பல்லி அந்த மிளகுவினால் ஏற்படும் எரிச்சலுடன், அதிலிருந்து வெளிவரும் வாசனையால் வராமல் இருக்கும்.

நல்ல குளிர்ச்சியான தண்ணீரை பல்லியின் மீது தெளித்தால், அது பல்லியின் உடல் வெப்பநிலையை குறைத்து, அது நகர முடியாமல் தத்தளிக்கும். அப்போது அதனை வெளியே தூக்கி போட்டுவிடலாம்.

வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை பல்லி பதுங்கியிருக்கும் இடங்களில் போட்டால், வெங்காயத்தில் உள்ள சல்பர், துர்நாற்றத்தை உண்டாக்கி, பல்லியை வெளியேற்றி வராமல் செய்துவிடும்.

முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால், அதிலிருந்து வெளிவரும் வாசனையால், பல்லி வராமல் இருக்கும். குறிப்பாக முட்டை ஓட்டை 3-4 வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காயச் சாறு மற்றும் சிறிது தண்ணீரை ஊற்றி கலந்து, அதில் சிறிது பூண்டு சாற்றினை ஊற்றி, நன்கு குலுக்கி, பின் அதனை பல்லி வரும் இடங்களில் தெளித்தால், வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைக்கு பல்லி ஓடிவிடும். வேண்டுமெனில், சில பூண்டுகளை உரித்து அதனை மூலைகளில் வைத்தாலும் பல்லி போய்விடும்.

மேற்கூறியவற்றை செய்வதற்கு முன்பு, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் உள்ள அசுத்தத்தினாலேயே பூச்சிகள் பல வரும். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டாலே, பல்லியின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
Share |

Show commentsOpen link

Friday, September 27, 2013

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 83 வது பிறந்த நாள் (செப். 28, 1929) latha mankeshgar birthday

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 83 வது ப&#
by vijigermany
New Tamil
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 83 வது
பிறந்த நாள் (செப். 28, 1929)
.

இவர் 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்தூரில் பிறந்தார். இவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரும் ஒரு பாடகர்தான். லதா மங்கேஷ்கர் தனது 13வது வயதில், அதாவது 1942ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். அதன்பின்னர் தனது குடும்பத்தின் நெருங்கிய நண்பரான மாஸ்டர் வினாயக்கின் உதவியுடன், பாடகராகவும், நடிகையாகவும் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1948ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் அதிக அளவில் பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும் ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும் இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.

முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை.

பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Happy birthday Lataji

Show commentsOpen link

புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா? Brilliant child

புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா?
by veni
Google NewsToday, 17:46

பிறக்கிற குழந்தை புத்திசாலியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?

கரு உருவான 20-வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 -வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.

இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்''

குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை…

இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை. 'ருபெல்லா' என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு 'ருபெல்லா வேக்சினேஷன்' எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும்.

அதே போல் அவளுடைய 15-வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும். இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு!

இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறையலாம்.

மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும். இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்பதால்தான்.

இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ… அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!

The post புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டுமா? appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Thursday, September 26, 2013

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?? What is Credit score ?

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன??

by Marikumar

இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்!!!

டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.

இந்த சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 91 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன்களை கட்ட தவறும் போது ஏற்பட போகும் விளைவுகளை பற்றி தெரியவில்லை என்று கிரெடிட் சுதார் என்ற முன்னணி கடன் ஆரோக்கிய மேம்பாடு நிறுவனம் கூறியுள்ளது.

8 நகரத்திலிருந்து 300 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த சர்வேயில், 85 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. இந்த செயலகம் கடன் வாங்கியவர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். பணம் கொடுப்பவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் (கடன் விஷயத்தில் அதை திருப்பி கொடுக்கும் அவர்களின்) நம்பகத்தன்மையை பற்றி தெளிவாக கூறி விடும்.

டெல்லி மற்றும் பூனேயில் நான்கில் ஒரு நபருக்கு இந்த கடன் செயலகத்தை பற்றிய அறிவும், புரிதலும் இருக்கிறது. இது போக டெல்லி, பெங்களூரு மற்றும் பூனேயில் சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 10 சதவீத பேர்களுக்கு தங்களின் கடன் மதிப்பீட்டின் புள்ளிகள் தெரிந்திருந்தது.

"இந்த சர்வே நடத்திய அடிப்படை காரணம், கடன் வாங்குபவர்கள் கடன் வலுக்குறைவுகளை சந்தித்திருந்தால் அதன் காரணத்தை பற்றியும் விளைவுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எதிர்மறையான கடன் விவரங்கள் மற்றும் குறைவான கடன் மதிப்பீட்டு புள்ளிகளால் அவர்களுக்கு கடன் அளிக்கப்படவில்லை என்ற காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று கிரெடிட் சுதார் நிறுவனத்தின் துணை நிறுவனர்களான அருண் ராமமூர்த்தி மற்றும் கௌரவ் வத்வாணி கூறியுள்ளார்கள்.

இந்த சர்வேயில் கடனின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அதற்கு காரணம் சர்வேயில் கலந்து கொண்டதில் ஒருவர் கூட தங்கள் அடையாளம் திருட்டு போனதற்கு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மேலும் கலந்து கொண்டவர்களில் 92 சதவீத பேர்களுக்கு கடன் செயலகம் தங்களுக்கு அளித்துள்ள கடன் மதிப்பீட்டு புள்ளிகளை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.

இது போக சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 4 சதவீத பேர்கள் தான் கடந்த ஒரு வருடத்தில் தங்களின் கடன் மதிப்பீட்டு புள்ளிகளை கேட்டு அறிந்து வைத்துள்ளார்கள். அதே போல் 98 சதவீத பேர்களுக்கு மாதிரி கடன் அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்ட போது அதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"91 சதவீத வாடிக்கையாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று இந்த சர்வே எடுத்து காட்டியுள்ளது." என்று ராமமூர்த்தியும் வத்வாணியும் கூறியுள்ளார்கள்.

"வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் மதிப்பீடு மற்றும் கடனை திருப்பி செலுத்தாமல் போவதால் ஏற்பட போகும் விளைவுகளை பற்றியும் அறிந்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் தொழில்முறை கடன் ஆலோசனை என்பது இந்தியாவில் இல்லை என்பதையும் இந்த சர்வே மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த கருத்தை வழங்க துவங்கினால் கடன் ஆலோசனை சேவைகளுக்கு அதிக இடங்கள் உருவாகும்." என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Share |

Show commentsOpen link

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!! Reduce body heat waters

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!
by Marikumar

முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.

ஆனால் இந்த உடல் வெப்பநிலையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இந்த அதிகப்படியான உடல் வெப்பத்தை வெப்ப அழுத்தம் என்றும் சொல்வார்கள். இத்தகைய உடல் வெப்பமானது அதிகம் இருந்தால், அது தானாக குறையாமல், வயிற்று வலி, உள்ளுறுப்புகளில் பாதிப்பு, பிம்பிள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் வெப்பமானது அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், அதிகப்படியான வெப்ப காலநிலை, அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் இத்தகைய உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில் பராமரிக்க முடியும். அதிலும் தண்ணீரை மட்டும் தான் பருக வேண்டும் என்பதில்லை, குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவதன் மூலமும், உடல் வெப்பத்தை தணிக்க முடியும்.

சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய சில ஜூஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் குறைக்க முடியும்.

சீரகம், உடல் வெப்பத்தை குறைக்கக்கூடிய தன்மை பெற்றவை. எனவே தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் தணிக்கலாம்.

எலுமிச்சை ஜூஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் வெப்பத்தை தணிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலம் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று தான் மோர். இத்தகைய மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்யும்.

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் உள்ள 95% தண்ணீர், உடல் வெப்பத்தை தணித்து, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களுள் மிகவும் சக்தி வாய்ந்த பானம் என்றால் அது இளநீர் தான். எனவே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், நாளடைவில் உடல் வெப்பமானது சீராக இருக்கும்.

உடலில் தண்ணீர் அதிகம் தேங்கினால், அது பெரும் தொந்தரவாகிவிடும். எனவே அத்தகைய தண்ணீர் தேக்கத்தை தடுக்க, குடிக்கும் தண்ணீரில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். முக்கியமாக உடல் வெப்பம் தணிக்கப்படும்.

புதினா ஜூஸ் என்பது உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் மிகவும் சிறப்பானது. ஏனெனில் புதினா குளிர்ச்சி தன்மையைக் கொண்டிருப்பதால், அது உடல் வெப்பத்தை தணித்து, உடலினுள் இருக்கும் உள்காயங்களை சரிசெய்யும். எனவே எலுமிச்சை ஸூஸ் போட்டு, அதில் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும்.

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை விரைவிலேயே குறைக்கலாம்.

கொதிக்க வைக்காத மாட்டுப் பாலை அப்படியே குடித்தால், உடல் வெப்பம் தணிவதோடு, செரிமான பிரச்சனை மற்றும் உடல் வறட்சியும் நீங்கும்.

இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது சோம்பை போட்டு ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பத்தினால் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம்.
Thatstamil
Share |

Show commentsOpen link

Parents should avoid telling these things to their children

Parents should avoid telling these things to their children - குழந்தைகளிடம் பெற்றோர் சொல்ல
by jv_66

பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்பு என்ற உணர்வு ஒன்று தான். பெற்றோர்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. பொறுப்பான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, வாழ்க்கையில் கடினமாக வேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள்.

பெருமைக்குரிய குழந்தையாக வளர்வது கடினமானதாக இருப்பது போலவே ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதும் கடினமானதாகும். கோபத்தின் வடிகாலாக பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகளை மனிதர்களால் மட்டுமே கூறமுடியும்.

இருப்பினும் இந்த கோபத்திற்கு ஆளாவது குழந்தைகள் மட்டுமே. இதனால் ஒரு நிலையற்ற, சமாளிக்க முடியாத விளைவுகள் குழந் தைகளிடையே ஏற்படுகிறது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்போதும் சொல்லக் கூடாதவைகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப்படித்து அவற்றை குழந்தைகளிடம் சொல்வதை தவிர்த்திடுங்கள்.

1. நான் உங்கள் வயதில் இருந்த போது, மிகவும் பொறுப்பாக இருந்தேன்!

மேற்கூறியவற்றையே பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வது. இவ்வாறு குழந்தையின் திறமையை தங்களுடன் ஒப்பிட்டு சொல்வது பெற்றோர்கள் செய்யும் முதல் தவறு ஆகும். பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்புகளினால் குழந் தைக்கு முதலில் வருவது எரிச்சல் மட்டும் தான்.

ஆகவே அப்போது நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகளை எல்லாம் நினைவுப்படுத்தி பார்த்து, அப்பொழுது உங்கள் பெற்றோர்களுக்கு உண்டான தொந்தரவுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். மேலும் குழந்தையிடம், வீட்டில் நீ தான் மூத்தவனாக இருப்பதால் எப்படி உறவுமுறைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தையின் நம்பிக்கை உடைந்துவிடுகிறது.

2 .நீ எப்போதுமே தவறான முடிவுகளையே எடுப்பாய்!

முதலில் இவ்வாறு கூறி குழந்தையின் பக்குவப்படாத வயதிற்காக தண்டனையை அளிக்கக்கூடாது. உண்மையில் கற்கின்ற போது எல்லோருமே தவறு செய்வது சகஜமான ஒன்று தான்.

ஒருவேளை குழந்தைகள் வேலை செய்ய எடுத்துக் கொண்ட கல்வித்துறை ஆர்வமூட்டுவதாக இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் எடுத்துக்கொண்ட கல்வித்துறையின் கம்பெனி மிகவும் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம்.

அதனால் அவர்கள் எடுத்துள்ள தீர்மானத்தில், அவர் களை குற்றம் சொல்ல வேண்டு மென்பது இல்லை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய, உங்களின் கருத்துக்களை ஏற்க கட்டாயப்படுத்தக்கூடாது.

3.ஏன் நீங்கள் ஒரு சகோதரன்/சகோதரி போன்று இருக்க முடியாது?

இது மீண்டும் ஒரு நியாயமற்ற ஒப்பீடாகும் மற்றும் இதுவும் பொதுவாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கிடையே அவர்களின் திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும்.

ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால் உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.ஆகவே குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளைத் தவிர்க்கலாம்.

4.என்னை தனியாக இருக்கவிடுங்கள்!

குழந்தைகள் கவலை மற்றும் பொறுப்புகள் இல்லாமல் அப்பாவித்தனமாக இருப்பார்கள், அதனால், பெரியவர்களுக்கு குழந்தைகளைப்பார்த்து கொள்ள வேண்டிய பெரிய பொறுப்புகள் உண்டு. அதே சமயம், சில நேரத்தில் நாம் தனிமையை விரும்பக்கூடும்.

அப்பொழுது குழந்தைகள் இதுபோன்ற சூழல்களை புரிந்து கொள்ளும் திறனற்று இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து அவசரப்பட்டு, `என்னை தனியாக இருக்கவிடு`, என்று எரிச்சல்பட்டு சொல்வது, குழந்தைக்கு புறக்கணிக்கப்பட்ட மற்றும் தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். ஆகவே இதுபோன்ற சமயத்தில் சிறிது பொறுமையாக இருந்து குழந்தையிடம் கோபமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

5.நீங்கள் உங்களை கண்டு வெட்கப்பட வேண்டும்!

இது மாதிரி வெளிப்படையாக மிகக்கடுமையாக மற்றும் மோசமாகப் பேசுவது, சாதாரணமாக எந்த ஒரு குழந்தைக்கும் தவறாகத் தான் தோன்றும். ஆம், சில குறும்புக்கார குழந்தைகளிடம் நச்சரித்து துளைத்தெடுக்கும் சுபாவம் மிக சாதாரணமாகக் காணப்படும்.

அதற்காக உங்களின் எதிர்ப்பை காண்பிக்க வேண்டுமென்பதில்லை. இந் நேரத்தில் குழந்தைக்கு நல்லது மற்றும் கெட்டது என இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை புரிய வைக்க சிறந்த மற்றும் பொறுமையான வழிகள் பல உள்ளன.

6.நீங்கள் உங்களது தந்தை/தாய் போலவே தான் இருக்கிறீர்கள்

திருமணமான அனைத்து தம்பதிகளும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில்லை. பெரும்பாலானோர் வெறுப்பினால் அவர்களது உறவுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் எதிராக கொடூரமாக வார்த்தைகளால் பேசிக்கொள்கின்றனர்.

இதனால் சில உறவுகள் இறுதியில் பிரிந்தும் விடுகின்றன. எவ்வாறு பார்த்தாலும், குழந்தைகள் இந்த பரஸ்பர விரோத போக்குக்கு மற்றும் விமர்சனங்களுக்கு ஒரு சாட்சியாகின்றனர். அதனால் உங்களுக்கு இடை யேயான விரோதத்தை, உங்கள் குழந்தை மீது காண்பித்தால், அது உங்கள் மீதான மரியாதையை இழக்கச்செய்யும்.

7.நீங்கள் எப்போது என்னை காயப்படுத்தலாம் என்ற நேரத்தை நோக்கியிருக்கிறீர்கள்!

குழந்தைகள், பெற்றோர்களை புண்படுத்தும் வகையில், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செய்வதன் மூலம், பெற்றோர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் நேரங்கள் இருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இது எதிர்பாராவிதமாக நடந்தாலும், சில சமயத்தில் குழந்தைகள் வேண்டுமென்றே செய்கின்றன.

எனினும், மேலே கூறப்பட்ட வார்த்தைகளைப் போன்று குழந்தைகளிடம் சொல்வதன் மூலம், அவர்களுடைய மனதில் குற்ற உணர்வு கொள்ளச்செய்து விடுகிறது. இதனால் அவர்கள் உங்களது கோரிக்கைகளுக்கு இணங்கி உங்களை மகிழச் செய்வார்கள்.

ஆனால் நீங்கள் அவர்களுடைய உரிமைக்கான மகிழ்ச்சியை நீண்ட காலமாக பறித்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் குழந்தைகளை தங்களுடைய சொந்த எண்ணத்தின் படி வாழவிட்டு, அவர்களை குற்றமற்ற வாழ்க்கை வாழ விடுங்கள்.

8.உங்களைப் போன்ற ஒரு குழந்தை இருப்பதை விட குழந்தையில்லாமல் இருப்பதே மேல்

மேலே சொல்லப்பட்டது போல் அவசரப்பட்டு சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தைகள் பெரும்பாலும் தீவிர உணர்ச்சி வசப்படுகின்றனர். மேலும் இது அவர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், அப்படிச் சொல்வது மனம் மிகவும் புண்படுத்தும் விதமாக இருப்பதால், குழந்தைகளிடம் இது போல் ஒருபோதுமே சொல்லக்கூடாது. எந்தவிதமான நெருக்கடியாக இருந் தாலும், இப்படி ஏதாவது சொல்வதன் மூலம், இறுதியில் அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படச் செய்து விடும்.

9.கெட்ட நண்பர்களின் சகவாசத்தை விட்டுவிடவும்!

பெற்றோர்களும் ஒருவரை நண்பராக்குவதற்கு முன்பு யோசனைச் செய்வதில்லை. அதுபோலவே குழந்தைகளும் செய்கின்றனர். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நமக்கு ஏற்படும் கெட்ட நண்பர்களின் சகவா சத்திலிருந்து எப்படி விட்டு விலக வேண்டுமென்று நமக்கு தெரியும்.

ஆனால் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு நண்பர்களே உலகம், எனவே நீங்கள் வெறும் அதிகாரத்தினால் `நல்ல' நண்பர்களைப் திரும்பவும் பெற வேண்டும் என்று அவர்களிடம் கூற முடியாது.










Show commentsOpen link

Wednesday, September 11, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? Online aathar card updation

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்


( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)


சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Sunday, September 1, 2013

உடல் எடையைக் குறைக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்! Reduce weight


தற்போது அனைவருக்குமே உடல் பருமன்
பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல்
எடையை குறைப்பதற்கு பலர்
கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும்
டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல்
இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால்,
எந்த ஒரு பலனும் கிடைக்காது.

எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக
செயல்பட வேண்டும். ஆம், எப்போதும்
கடுமையான உடற்பயிற்சி மற்றும்
டயட்டை மேற்கொண்டால்,
உடலுக்கு வேண்டிய
சத்துக்களானது கிடைக்காமல், உடல்
மிகவும் சோர்வடைவிடும். இதனால்
உடல் எடை குறைகிறதோ இல்லையோ,
பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம்
சந்திக்க நேரிடும்.
எனவே அளவான உடற்பயிற்சியுடன்,
ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல்
எடையை நிச்சயம் குறைக்கலாம்.
அதிலும் இதுவரை எத்தனையோ உடல்
எடையை குறைக்கும் உணவுப்
பொருட்களைப் பார்த்திருப்போம். ஆனால்,
இப்போது பார்க்கப்போவது பலரும்
நினைத்துப் பார்க்காத உடல் எடையைக்
குறைக்கும் சில உணவுப்
பொருட்களைத் தான். இத்தகைய உணவுப்
பொருட்களை சாப்பிடுவதோடு,
அத்துடன் தினமும் சரியான அளவில்
உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டும். ஏனெனில் உடல் எடையைக்
குறைப்பதற்கு உணவுகள் மட்டும்
உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும்
பின்பற்றுங்கள்.

சரி, அந்த உணவுப் பொருட்கள்
என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக
இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்
காளான்
உடல் எடையை வேகமாக குறைக்க
உதவும் உணவுப் பொருட்களில்
ஒன்று காளான். இந்த காளானை உணவில்
அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள
குறைவான கலோரி மற்றும்
கொழுப்புக்களால், உடல்
எடை அதிகரிக்காமல் இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில்
கார்போஹைட்ரேட் குறைவாகவும்,
வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம்
இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம்
நிறைந்துள்ளது. எனவே தினமும்
உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர்,
முட்டையின்
வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின்
சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம்
பசிக்காமலும் தடுத்து, உடல்
எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க
உதவும்.

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,
மருத்துவரை பார்க்க வேண்டிய
அவசியமே இருக்காது.
அதே ஆப்பிளை தினமும்
சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும்
கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ஏனெனில்
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்,
அது உடலில் தங்கும் தேவையில்லாத
கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன்
அதிகரிப்பதை தடுக்கும்.

பாகற்காய்
பாகற்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்ற
உடல் பருமனால் அவஸ்தைப்படுவோரு
க்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில்,
பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள
சத்துக்களானது, உடலில் தங்கும்
தேவையற்ற கொழுப்புக்கள்
தங்குவதை கரைப்பதோடு,
கலோரிகளையும் எரித்துவிடும்.

பட்டை
பட்டையை உணவில் சேர்த்தால்,
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு,
உடல் எடையை குறைக்கவும் உதவும்.

எனவே இநத் மசாலாப்
பொருளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

மிளகாய்
அனைவருக்குமே காரம் என்றால்
மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட
ஒரு வகையில் உடல் எடையைக்
குறைக்க உதவியாக இருக்கும்.

அதிலும்
குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில்
சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த
மிளகாயில் உள்ள பொருளானது,
உடலில் தங்கியிருக்கும்
கொழுப்புக்களை கரைத்து,
டாக்ஸின்களை வெளியேற்றி, உடல்
எடை குறைய உதவியாக இருக்கும்.

முள்ளங்கி
முள்ளங்கியை வேக
வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள
நார்ச்சத்துக்கள
ானது அப்படியே கிடைத்து, உடலில்
உள்ள கெட்ட கொழுப்புக்களானத
ு கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம்
பசியெடுக்காமலும் இருக்கும்.
டார்க் சாக்லெட்
அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள்
அதிகம்
உள்ளது என்று சாப்பிடுவதில்லை.
ஆனால் உண்மையில் டார்க்
சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல்
எடை குறைவதோடு, இதயத்தையும்
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள
முடியும்.

பச்சை பயறு
அனைத்து சமையலறைகளிலும்
கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின்
நிறைந்த உணவுப் பொருள் தான்
பச்சை பயறு. உடல் எடையை குறைக்க
நினைப்போர்,
உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு,
பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால்,
நல்ல பலன் கிடைக்கும். மேலும்
இது செரிமானத்திற்கும் மிகவும்
நல்லது.